கேரளாவைச் சேர்ந்த ஜோயாலுக்காஸ் நகைக் குழுமத்தின் உரிமையாளரான ஜோய் ஆலுக்காஸ் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) முடக்கியுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 22 அன்று திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட நகைக் குழுமத்தின் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை இயக்குனரகம் விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சூரில் உள்ள ஷோபா நகரில் நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கொண்ட 33 அசையா சொத்துக்கள் (ரூ. 81.54 கோடி) ஆகும்.
மேலும், மூன்று வங்கி கணக்குகள் (ரூ. 91.22 லட்சம் வைப்புத்தொகை), ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் ஜோயா ஆலுக்காஸ் இந்திய பங்குகள் (மதிப்பு ரூ. 217.81 கோடி) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா) பிரிவு 37A-ன் கீழ் இணைக்கப்பட்ட இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.305.84 கோடி ஆகும்.
மேலும், ஃபெடரல் புலனாய்வு முகமையின்படி, "இந்தியாவில் இருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸின் 100 சதவீத நிறுவனமான துபாயில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் முதலீடு செய்யப்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சோதனையின் போது சேகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் அஞ்சல்கள் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஜோய் ஆலுக்காஸின் தீவிர ஈடுபாட்டை தெளிவாக நிரூபித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் முதலீடு செய்யப்பட்ட நிதியின் உரிமையாளர் வர்கீஸ் என்றும் அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/