/indian-express-tamil/media/media_files/pchNhRffd1SYgvNpQHAH.jpg)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு
அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதை எதிர்த்து, தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை அடிப்படை உரிமை அல்லது அரசியலமைப்புச் சட்டம் அல்ல என்று கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: ED in SC opposes interim bail to Delhi CM Arvind Kejriwal, says electioneering not fundamental right
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தில், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
"தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்ல, சட்டப்பூர்வ உரிமையும் கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அமலாக்கத் துறை கூறியது. மேலும், “போட்டியிடும் வேட்பாளராக இல்லாவிட்டாலும், பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளருக்கு கூட தனது சொந்த பிரச்சாரத்திற்காக காவலில் இருந்தால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படாது” என்றும் அமலாக்கத் துறை கூறியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இடைக்கால உத்தரவை (ஜாமீனில்) வெள்ளிக்கிழமை அறிவிப்போம். அன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்த மனு தொடர்பான முக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்றார். ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மே 7 அன்று, நீதிபதி தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றம், ஏப்ரல் 9 ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உறுதி செய்து, கைது சட்டவிரோதம் இல்லை என்றும், அவர் மீண்டும் மீண்டும் சம்மன்களைத் தவிர்த்துவிட்டு விசாரணைக்கு ஆஜராக மறுத்ததால் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு "சிறிய வழி" விடப்பட்டது என்றும் கூறியது.
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் இப்போது நீக்கப்பட்ட கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.