கடந்த ஆண்டு வருமான வரித்துறையின் அறிக்கைக்கு பிறகு பினராயி விஜயனின் மகள் வீணா பல்வேறு மத்திய அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: ED launches probe against Kerala CM Pinarayi Vijayan’s daughter in ‘illegal payment scandal’
கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் மகள் முறைகேடாக பணம் செலுத்தியதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பினராயி விஜயனின் மகள் வீணா, கொச்சியைச் சேர்ந்த கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) தொடர்பான கடந்த ஆண்டு வருமான வரித் துறை அறிக்கைக்கு பின்னர் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த நிறுவனம் தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 2018-19 முதல் மூன்று ஆண்டுகளில் 1.72 கோடி ரூபாய் சட்டவிரோதமாக செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் (எஸ்.எஃப்.ஐ.ஓ), வீணாவின் நிறுவனத்திற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்.எஃப்.ஐ.ஓ-வின் விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.
கேரளாவில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி), உயர் நீதிமன்றத்தில் எஸ்.எஃப்.ஐ.ஓ விசாரணையை எதிர்த்தது. ஆனால், நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது மட்டுமல்லாமல், கே.எஸ்.ஐ.டி.சி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் எனக் கேட்டது.
சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த மூத்த அரசியல்வாதி பி.சி. ஜார்ஜின் மகனும், கோட்டயம் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான ஷோன் ஜார்ஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வீணாவின் நிறுவனம், சி.எம்.ஆர்.எல் மற்றும் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் மாநில அரசு நிறுவனமான கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றில் இ.டி.யை விசாரணை நடத்தக் கோரி இருந்தார்.
எக்ஸாலாஜிக் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் பணமோசடியில் ஈடுபட்டதாக ஷோன் குற்றம் சாட்டியிருந்தார், எனவே இ.டி விசாரணையை நாடினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“