இந்தியாவின் FDI விதிகளை இ-காமர்ஸ் தளங்கள் மீறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை எட்டு விற்பனையாளர்களுடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனை செய்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் பஞ்ச்குலா ஆகிய ஊர்களில் 19 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
ED raids 19 locations linked to vendors selling on Amazon, Flipkart
சரக்குகளின் விற்பனை விலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்துவதன் மூலம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு விதிகளை இ-காமர்ஸ் தளங்கள் மீறுகின்றன என்ற புகார்களின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளின் கீழ் தனது விசாரணையைத் தொடங்க ED முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை பெயரிடப்படாத எட்டு விற்பனையாளர்களுடன் தொடர்புடைய வளாகங்களில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ED ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ED நடவடிக்கைக்கு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) வரவேற்பு தெரிவித்துள்ளது. சிஏஐடி, பல வர்த்தக அமைப்புகளுடன் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளை எழுப்பி வருவதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்பியுமான பிரவீன் கண்டேல்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறு வணிகர்கள் மற்றும் கிரானா கடைகளை மோசமாகப் பாதித்தது மற்றும் போட்டி எதிர்ப்பு நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக இந்திய போட்டி ஆணையமானது (சிசிஐ) ஈ-காமர்ஸ் தளங்களுக்கும் அவற்றின் சில விற்பனையாளர்களுக்கும் அபராத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இ - காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களின் செயல்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தக் கோரியும் நிறுவனங்கள் செய்யும் விலை நிர்ணயம் மற்றும் பொருட்களுக்கு வழங்கும் அதிக தள்ளுபடி போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி CAIT மற்றும் மெயின்லைன் மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் AIMRA ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு CCI க்கு மனு அளித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“