டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சதிகாரரே அவர்தான் என்று அமலாக்கத் துறை, டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
இதனால் ஆம் ஆத்மி கட்சியே (AAP) குற்றம் சாட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலின் ரிமாண்ட் விசாரணையின் போது, “தனிநபர் மற்றும் பொறுப்பு காரணமாக முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
முதன்முறையாக நீதிமன்றத்தில், ரிமாண்ட் மனுவில், "அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் ஆம் ஆத்மி கட்சி பணமோசடி குற்றத்தை செய்துள்ளது..." என்று அமலாக்கத்துறை வெளிப்படையாக குற்றம் சாட்டியது.
"கறைபடிந்த நிதி" உருவாவதற்கான ஆதாரமாகக் கருதப்படும் மதுபான கலால் கொள்கையை வகுப்பதில் - முதல்வராக இருந்ததன் மூலம் - கெஜ்ரிவால் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளராக இருந்த விஜய் நாயர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பணியாற்றினார். கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு அருகில் வசிக்கும் நாயர், ஆம் ஆத்மி மற்றும் தெற்கு குழுவுக்கு இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து விவகாரங்களுக்கும் கெஜ்ரிவால் தான் பொறுப்பு. அவர் கட்சியின் தேசிய அமைப்பாளர். லஞ்சம் ரொக்கமாக வந்தது. கோவா சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
கலால் கொள்கை ஒரு மோசடி, இது கோவா தேர்தலுக்கு நிதியளிப்பதற்காக மட்டுமே செய்யப்பட்டது என்று வழக்கறிஞர் கூறினார்.
இதன் விளைவாக, ஆம் ஆத்மி கட்சியையே, குற்றவாளியாக அமலாக்கத்துறை பார்க்கக்கூடும் என்று அறியப்படுகிறது. அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ள ஒரு "நிறுவனம்" அதன் சொத்துக்களை இணைக்கலாம் அல்லது பறிமுதல் செய்யலாம் என்பதால் இது முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 70வது பிரிவு நிறுவனங்களின் குற்றங்களைக் கையாள்கிறது.
ஒரு அரசியல் கட்சியானது நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் இணைக்கப்பட்ட ஒரு "நிறுவனம்" அல்ல என்றாலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் அரசியல் கட்சியை கொண்டு வரக்கூடிய முக்கியமான விளக்கத்தை இந்த விதி கொண்டுள்ளது.
இதன் கீழ், "கம்பெனி" என்பது எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தையும் குறிக்கிறது. இதில் ஒரு நிறுவனம் அல்லது பிற தனிநபர்களின் அசோசியேஷன் அடங்கும்.
இதில், association of individuals என்ற சொற்றொடர் ஒரு அரசியல் கட்சியை உள்ளடக்கியிருக்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A இன் படி, இந்தியாவின் தனிப்பட்ட குடிமக்களின் எந்தவொரு சங்கம் அல்லது அமைப்பு, தன்னை ஒரு அரசியல் கட்சி என்று அழைக்கிறது.
Read in English: ED refers to AAP as PMLA accused, party could face action as well
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“