எடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’

எடியூரப்பா ராஜினாமா பற்றி கருத்து கூறிய ப.சிதம்பரம், ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’என வர்ணித்தார்.

எடியூரப்பா ராஜினாமா பற்றி கருத்து கூறிய ப.சிதம்பரம், ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’என வர்ணித்தார்.

எடியூரப்பா 3 நாள் முதல்வராக கர்நாடகாவில் பதவி வகித்து, ராஜினாமா செய்திருக்கிறார். கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மை இல்லாத பட்சத்திலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ்-மஜத இணைந்து மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்.எல்.ஏ.க்களை விட கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்திருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லது மஜத.வை உடைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியும் என பாஜக நம்பியது.

எடியூரப்பா முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு, கடைசி நிமிடம் வரை வெற்றி பெறுவோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பா ராஜினாமா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கேலியாக கருத்து கூறியிருக்கிறார்.

ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்’ என கூறியிருக்கிறார். பொம்மையாக எடியூரப்பாவையும், பொம்மலாட்டக்காரர்களாக பாஜக மேலிடத் தலைவர்களையும் அவர் வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close