ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் 2020 ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் விசாரணைக்காக டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்திற்கு திங்கள்கிழமை அழைக்கப்பட்டார். ஆனால், அவர் 2018 இல் பதிவிட்ட ட்வீட்டிற்காக வேகமாக கைது செய்யப்பட்டார்.
இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமான எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் (Alt-News) இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகத்தை பிளவுபடுத்தி துருவப்படுத்துவதற்கும் தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கும் தவறான தகவல்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துபவர்களால் இந்த எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு கோபப்படுத்தியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை மதியம் துவாரகாவில் உள்ள டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்திற்கு ஜுபைர் அழைக்கப்பட்டார். ஆனால், அவர் 2018 இல் பதிவிட்ட ட்வீட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரச்னைக்குரிய அந்த ட்வீட்டில், ஒரு ஹோட்டலின் புகைப்படம் உள்ளது. அந்த ஹோட்டலின் பலகையில், ஹனுமன் ஹோட்டலுக்கு ‘ஹனிமூன் ஹோட்டல்’ என்று வர்ணம் பூசப்பட்டிருந்தது. இது சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனரால் சுட்டிக்காட்டப்பட்டு, தனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டி ட்வீட் செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (வெவ்வேறு மதக் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295 ஏ (தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு இந்திய எடிட்டர்ஸ் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. “இது ஒரு வினோதமான நிகழ்வாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் ஒரு வழக்கில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் விசாரிக்க அழைக்கப்பட்ட ஜுபைர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யப்படுவதற்கு எதிராக அவருக்கு ஏற்கனவே பாதுகாப்பு இருந்தது. இருப்பினும், சம்மனுக்கு ஜுபைர் பதிலளித்தபோது, அந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட குற்றவியல் விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ஒரு அநாமதேய ட்விட்டர் கணக்கு ஜுபைரின் 2018 ஆம் ஆண்டு பதிவு மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடிட்டர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், போலிச் செய்திகளைக் கண்டறிவதில் ‘ஆல்ட் நியூஸ்’ தளம் சில பெரிய வேலைகளைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில், இந்திய எடிட்டர்ஸ் சங்கத்தின் தலைவர் சீமா முஸ்தபா, பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர் மற்றும் பொருளாளர் அனந்த் நாத் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
“உண்மையில், அவர் ஒரு தொலைக்காட்சி சேனலில் ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளரின் விஷமக் கருத்துக்களை அம்பலப்படுத்தினார். அது கட்சியை திருத்திக்கொள்ள அனுமதித்தது’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜுபைரின் முந்தைய ட்வீட்களைக் குறிப்பிடுகிறது. இது நூபுர் ஷர்மாவை நபிக்கு எதிராக கூறிய கருத்துகளுக்காக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து பாஜக நீக்கியது.
“ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளின் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதன் மூலம் மீள்திறன்மிக்க ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஜெர்மனியில் நடந்த ஜி-7 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளை வலியுறுத்துவது அவசியம்” என்பதால், டெல்லி காவல்துறை உடனடியாக ஜுபைரை விடுவிக்க வேண்டும் என்று இந்திய எடிட்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பிரஸ் கிளப் (Press Club of India) ஜுபைர் கைதுக்கு கண்டனம்
இந்திய பிரஸ் கிளப் ஜுபைர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கிளப் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பேச்சுரிமையைப் பாதுகாக்க இந்தியா ஜி7 மற்றும் நான்கு நாடுகளுடன் இணைந்த நாளில் டெல்லி காவல்துறையால் முஹம்மது ஜுபைர் கைது செய்யப்பட்டது முரண்பாடாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டார். ஜெர்மனியில் நடந்த சந்திப்பில், கையொப்பமிட்ட தலைவர்கள் சிந்தனை, மனசாட்சி, மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் சமயங்களுக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளனர்.
இந்திய பிரஸ் கிளப் “கருத்து சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டில் மத்திய உள்துறை அமைச்சகமும் டெல்லி காவல்துறையும் பிரதமர் பக்கம் இல்லையா?” என்று அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“