சந்தோஷ் மெஹ்ரோத்ரா (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ) , ஜஜாதி பரிதா ( பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம்) ஆகியோர் இணைந்து இந்தியாவில் வேலையில்லாதவர்கள் பற்றிய ஆய்வரிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையை நாம் படித்து பார்த்தோமானால், வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாவதை நம்மால் உணர முடியும்.
15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களை இந்த ஆய்வுக்காக இளைஞர் என்று கருதப்பட்டது . 2004-05 ல் 8.9 மில்லியனாக மொத்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, 2011-12ம் ஆண்டில் ஓரளவு உயர்ந்து 9 மில்லியன் ஆனது . 2017-18 ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25.1 மில்லியனாக உயர்ந்துள்ளது என்ற தகவல் நம்மை மிகவும் கவலையில் ஆழ்த்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க : Youth unemployment rising with educational qualifications: Study
இதில், மோசமான விஷயம் என்னவென்றால், ஒருவர் கல்வியில் அடுத்த நிலைமைக்கு உயரும் போது வேலையின்மையும் அதிகமாகிறது. அனைத்து கல்வித் தகுதியுடைய இளைஞர்களும் வேலையில்லாமல் தள்ளாடுகின்றனர்.
இந்த 25 மில்லியன் வேலையற்ற இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்கியுள்ள மாநிலங்கள் பின்வருமாறு : உத்தரபிரதேசம் (3 மில்லியன்), ஆந்திரா (2.2 மில்லியன்), தமிழ்நாடு (2.2 மில்லியன்), மகாராஷ்டிரா (1.9 மில்லியன்), பீகார் (1.9 மில்லியன்), மேற்கு வங்கம் (1.5 மில்லியன்) ), மத்தியப் பிரதேசம் (1.3 மில்லியன்), கர்நாடகா (1.2 மில்லியன்), ராஜஸ்தான் (1.2 மில்லியன்), ஒடிசா (1.1 மில்லியன்), குஜராத் (1 மில்லியன்) கேரளா (1 மில்லியன்).
இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்பது போல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன. உதரணமாக, 2011-12 ம் ஆண்டில் 232 மில்லியன் விவசாயத்தில் வேலை செய்து வந்தானர், 2017-18 ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 205 மில்லியனாக குறைந்துள்ளது. ஆனால் , மற்ற துறைகளில் இந்த மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் விகிதம் போதுமானதாக இல்லை என்பதை இந்த ஆய்வின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சேவைத் துறை, உற்பத்தி அல்லாத துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தாலும் , வேலைவாய்ப்பின் முன்னோடி என்று கருதப்படும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு வீழ்ச்சியைத் தான் சந்தித்துள்ளது. உதாரணமாக, 60 மில்லியன் மக்கள் 2011-12 களில் உறபத்தி துறையில் வேலை செய்தனர், 2017-18 ல் இந்த எண்ணிக்கை 56 மில்லியனாக சுருங்கியுள்ளது.
இந்த ஆய்வில், 15 முதல் 29 வயதுடையவர்களில் வேலை,கல்வி,பயிற்சி என மூன்றிலும் ஈடுபடவில்லை என்று 100 மில்லியன் இளைங்கர்கள் சொல்லியுள்ளனர். 2011-12ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 83 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது