ஜூன் 16 அன்று இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் சனிக்கிழமை அன்று தான் இரமலான் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில் பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஜூன் 16ம் தேதி இரமலான் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் அன்று வங்கிகள் இயங்குமா இயங்காதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து பேசிய அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கான்பிடரேஷனின் தலைவர் ஜெனரல் ஃப்ரான்கோ "பொதுவாக ஒருமுறை ஒரு குறிப்பிட்ட தேதியில் அறிவிக்கப்பட்ட விடுமுறையினை, பிறையினைப் பார்த்து மாற்றி அறிவிக்கமாட்டார்கள். சில தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு இரமலான் விடுமுறை ஜூன் 15 அன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி கேரளா, மிசோரம், ஒடிசா, புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நாளை வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது" என்று கூறியுள்ளார். யுகோ வங்கியில் விடுமுறையானது பிறை தெரியும் நாளினை கணக்கில் வைத்தே அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கின்றார்கள்.
ஆனால், பிஸ்வா பங்களா லோகோவினைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடிதமொன்றில் வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்ற போலியான அறிவிப்பு வெளியாகி மக்கள் மத்தியில் பரவிவருகின்றது. அது குறித்த விசாரனையை அரசாங்கம் தொடங்கியிருக்கின்றது.