வேகமாக வளர்ந்து வரும் உலக நகரங்கள் 10 : முதலிடம் பிடித்த மலப்புரம்!

தமிழகத்தின் திருப்பூர் கடந்த 5 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியில் 30வது இடத்தைப் பிடித்துள்ளது

By: Updated: January 8, 2020, 12:36:25 PM

EIU Survey fastest-growing urban areas malappuram, kozhikode, kollam : எக்கோனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit (EIU)) சர்வே, உலக அளவில் அதி வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் கொல்லம் ஆகிய நகரங்கள் முதல் 10 நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

EIU Survey fastest-growing urban areas malappuram, kozhikode, kollam

கடந்த 5 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியை கண்ட நகரமாக மலப்புரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 44.1% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது கோழிக்கோட்டு (வளர்ச்சி 34.5%). கொல்லம் (31.1%) 10வது இடத்தில் உள்ளது.

கேரளாவின் திருச்சூர் 30.2% வளர்ச்சியுடன் 13வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் சூரத் 26வது இடத்திலும், தமிழகத்தின் திருப்பூர் கடந்த 5 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியில் 30வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 நகரங்களுக்கான பட்டியலில் சீனாவில் இருந்து மூன்று நகரங்கள், நைஜீரியாவில் ஒரு 1 நகரம், ஓமன், வியட்நாம், அமீரகம் நாடுகளில் இருந்து தலா ஒரு நகரம் இடம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் அனலிஸ்ட் செய்யும் இந்த சர்வே தி எக்கனாமிஸ்ட் மேகஜினின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : புதிதாக உதயமாகும் பொள்ளாச்சி மாவட்டம்? 40 மாவட்டங்களை எட்டும் தமிழகம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Eiu survey fastest growing urban areas malappuram kozhikode kollam featured in top 10 ranking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X