வாக்காளர்கள் மத்தியில் மிக பிரபலமான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்ற விளம்பரம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ’Idea Exchange’ நிகழ்வில் கலந்துகொண்ட மகராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில் “ எங்கள் இருவரின் உறவில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. இருவர் மீது இருவர் வைத்திருக்கும் மரியாதையால் இந்த உறவு நீடித்து வருகிறது. நான் இப்போது துணை முதல்வராக இருக்கிறேன். அவர் முதல்வராக இருக்கிறார். இது எங்கள் வியாபார உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வியாபார உறவில் எனது முதலாளி அவர். இந்நிலையில் முதல்வராக இருப்பதால் எனது தலைவராக, அவருக்கு கீழ் பணிபுரிவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. மேலும் ஏக்நாத் ஷிண்டே தன்னை ஒரு தலைவராகவோ அல்லது முதலாளி போல் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஒரு விளம்பரம் எங்கள் உறவை பாதிக்காது” என்று கூறினார்.
2024 சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு “ இது பாஜகவின் நாடாளுமன்ற தலைமை முடிவு செய்ய வேண்டும் . தற்போது நாட்டின் தலைமை முதல்வர்தான். தேர்தலை எதிர்கொள்ளும்போது, அரசின் தலைமையாக அவர் செயல்படுவார்,” என்று கூறினார்.
அரசியலின் தற்போதைய நிலையை குறித்து கேட்டபோது “ மகாராஷ்டிரா இதுவரை இதுபோன்ற அரசியலை பார்த்ததில்லை. அப்படி ஒரு மோசமான நிலைக்கு அரசியல் சென்றுள்ளது. எல்லா நாளும் காலை 9 மணிக்கு யார் தவறான வார்த்தைகளை பேசுவார் என்றும் அதற்கு பதிலளிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. இது நாள் முழுவதும் செய்திகளில் ஓட்டிக் கொண்டே இருக்கும். அவர்கள் எங்களை ஏதேனும் கூறினால், பதிலுக்கு நாங்கள் ஏதேனும் கூற வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. முன்பு ஒரு காலத்தில் இருந்த அரசியல் சூழல் போல் தற்போது இல்லை. தென் மாநிலங்களைப்போல் நாங்கள் மோசமாக இல்லை. எங்களுக்குள் இருக்கும் தகவல் தொடர்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதுதான் முக்கிய சிக்கல். ” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“