ஷிவ் ஷங்கர் சாஹாவிற்கு, தனது மின்சாரக் கட்டணத்தைப் புதுப்பிக்க வாடிக்கையாளர் சேவையிலிருந்து அழைப்பு வந்தது வழக்கமான ஒன்றாகத் தான் தோன்றியது. ஆனால் அழைப்பு முடிந்த பிறகுதான், 67 வயதான அவர் தனது கிரெடிட் கார்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் கொள்ளைப் போனதை உணர்ந்தார்.
ஜூன் 16 அன்று, சஃப்தர்ஜங் என்கிளேவில் வசிக்கும் மருத்துவர் சஹா, தனது BSES மின் கட்டணத்தை புதுப்பிக்க அழைப்பு வந்ததாக தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டலில் (NCRP) புகார் பதிவு செய்தார்.
செல்போனில் பேசியவர் பில் அப்டேட் செய்வதற்காக 10 ரூபாயை செலுத்துமாறு கூறியுள்ளார், சஹாவும் இதை நம்பி தனது HSBC கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினார்.
அழைப்பின் போது, குற்றவாளி சாஹாவின் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிடும் போது, உங்கள் சொந்த டிவைசில் இருந்து மற்ற டிவைசை கட்டுப்படுத்த உதவும் ரிமோட் அசஸ் அப் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், சஹா தனது கார்ட் மூலம் தலா ரூ.1,98,221.40 மூன்று பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதைக் கண்டறிந்தார்.
இதுகுறித்து போலீசார் IPC பிரிவுகள் 419 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் சப்தர்ஜங் சைபர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஏமாற்றப்பட்ட மொத்தம் ரூ.5,94,664 பணம் பேமெண்ட் கேட்வே மூலம் மூன்று கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதில், முகுந்த்பூரில் உள்ள சம்தா விஹாரில் வசிக்கும் குணால் என்பவரின் பெயரில் உள்ள இண்டஸ்இண்ட் வங்கியில் ரூ.1.95 லட்சம் பெறப்பட்டது.
போலீசார் குணால் வீட்டிற்கு வந்தனர், அங்கு எடி என்ற ஆதித்யா என்ற நபர் தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தக் கணக்கைத் தொடங்கியதாக அவர் கூறினார். ஆதித்யா பயன்படுத்திய மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார், என்று டிசிபி (தென்மேற்கு) ரோஹித் மீனா கூறினார்.
ஆதித்யா புராரியில் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். நாங்கள் அவரது வீட்டை அடைந்தபோது, அவர் அங்கு இல்லை. பின்னர் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 28 அன்று, ஆதித்யா மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட புராரியில் தேடுதல் நடத்தப்பட்டு, அவர் இறுதியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன, என்று சைபர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
அவனிடம் நடத்திய விசாரணையில், ஒரு பெரிய மோசடியை போலீஸ் கண்டுபிடித்தது.
வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு அது, நிதி மோசடி செய்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆதித்யா, குணாலின் வங்கிக் கணக்கை இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி உள்ளான்.
பின்னர் அவன் டெலிகிராம் குழுவில் சந்தித்த மேற்கு வங்காளத்தில் சில தெரியாத நபர்களுக்கு கணக்கிற்கான அக்சஸ் வழங்கினான். நிதி மோசடிக்காக போலி வங்கிக் கணக்குகளை வாங்க அல்லது விற்க விரும்பும் நபர்களுக்கான குழு இது. ஆதித்யா குழுவில் இருந்து வாங்குபவர்களின் முகவரிகளைப் பெற்று, கூரியர் மூலம் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுபோல ஜம்தாரா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மோசடி நபர்களுக்கு 10க்கும் மேற்பட்ட கணக்குகளை அவன் விற்றுள்ளார். ஆதித்யா மீது முன்பு இரண்டு என்சிஆர்பி புகார்கள் உள்ளதாக, காவல் அதிகாரி தெரிவித்தார்.
Read in English: Elderly doctor gets a call to update his electricity bill, conned of nearly Rs 6 lakh
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.