வாட்ஸ்அப் பயனர்களுக்கு விக்சித் பாரத் சம்பார்க் என்ற கணக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: EC asks Centre to halt sending out PM Modi’s letter on ‘Viksit Bharat’ via WhatsApp
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் ஆனையம் ஒரு இணக்க அறிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, மார்ச் 15-ம் தேதி வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்பட்டதாக மார்ச் 16-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
“தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், கணினி கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் வரம்புகள் காரணமாக சில கடிதங்கள் தாமதமாக டெலிவரி செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதுபோன்ற செய்திகள் இன்னும் மக்களின் போன்களில் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன” என்று தேர்தல் ஆணையம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திடம் கூறியுள்ளது.
“தேர்தல் நடத்தை விதிமுறைகள் இப்போது நடைமுறையில் இருப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் காலத்தில் இனி ‘வாட்ஸ்அப் மெசேஜ்கள்’ டெலிவரி செய்யப்படுவதில்லை என்பதை உடனடியாக உறுதிசெய்யுமாறு உங்களுக்கு இதன்மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இணக்க அறிக்கை உடனடியாக அனுப்பப்பட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மார்ச் 18-ம் தேதி இந்தப் பிரச்னையை எழுப்பினர். இது மார்ச் 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அமலுக்கு வந்த மாதிரி நடத்தை விதிகளை மீறுவதாகக் கூறியது. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில், திரிணாமூல் எம்.பி. தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு அமைச்சகத்தால் பதிவுசெய்யப்பட்ட ‘விக்சித் பாரத் சம்பார்க்’ என்ற கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் கடிதத்தைப் பெற்றதாக மார்ச் 18 அன்று சாகேத் கோகலே தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள பயனர்களும் இந்த கடிதத்தைப் பெற்றதாகக் கூறியதால், கடிதத்தைப் பரப்புவதற்கு எந்த தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடுமாறு செயலாளரிடம் அவர் கேட்டிருந்தார்.
“இந்தச் செய்தியில் பிரதமர் மோடியின் கடிதம் இருந்தது மற்றும் மோடி மற்றும் பா.ஜ.க-வுக்கு வெளிப்படையான மற்றும் வெட்கமில்லாமல் பிரச்சாரம் மற்றும் சந்தைப்படுத்தல் இருந்தது. “மோடி அரசாங்கத்தின் வழக்கமான திறமையின்மைக்கு நன்றி, இந்த செய்திகளில் பெரும்பாலானவை மார்ச் 16 மாலை 4:30 மணிக்குப் பிறகு மக்களால் பெறப்பட்டன. தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நேரம் ” என்று கோகலே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“