டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டப் பேரவைக்கான பதவிக்காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது.
இந்தநிலையில், தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. 17 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
2015 மற்றும் 2020 தேர்தல்களில் முறையே 67 மற்றும் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. கடந்த இரண்டு சட்டசபைகளில் ஒற்றை இலக்கத்தில் பா.ஜ.க வென்றது. 15 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் முற்றிலும் தொடைத்து எரியப்பட்டது. தற்போதைய ஆம் ஆத்மிக்கு எதிராக போட்டியிடுகின்றன.
மக்களவை தேர்தலை போன்று டெல்லி தேர்தலிலும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜ.க சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.