அக்.21-ல் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: நாங்குனேரி, விக்கிரவாண்டி உள்பட 64 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு

ECI Press Conference: நாடாளுமன்ற வெற்றிக்கு பிறகு மோடி அரசுக்கு முக்கிய பரீட்சையாக இந்தத் தேர்தல்கள் அமையும்.

Election commission of india press conference today

Election Commission Of India Press Conference: இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இதில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


குறிப்பாக மஹாராஷ்டிரா, ஹரியான சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் தேதியை உள்ளடக்கிய அட்டவணை வெளியானது. அக்டோபர் 21-ம் தேதி மேற்படி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற வெற்றிக்கு பிறகு மோடி அரசுக்கு முக்கிய பரீட்சையாக இந்தத் தேர்தல்கள் அமையும்.

 

Live Blog

ECI Press Conference: 288 உறுப்பினர்களைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டமன்ற ஆயுள், நவம்பர் 9-ம் தேதி முடிகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தின் ஆயுள் நவம்பர் 2-ம் தேதி முடிகிறது.

14:15 (IST)21 Sep 2019
பல்வேறு மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா தேர்தல் ஆவற்றுடன் பல்வேறு மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. அருணாசல்பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், அஸ்ஸாம், குஜராத், இமாசலபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிஸா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்படி 64 தொகுதிகளும் அடங்குகின்றன.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குனேரி உள்பட அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடக்கிறது.

13:09 (IST)21 Sep 2019
நாங்குனேரி, விக்கிரவாண்டி வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல், புதுவை காமராஜர் நகர் தேர்தல் மற்றும் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (23-ம் தேதி) தொடங்குகிறது.

12:47 (IST)21 Sep 2019
வாக்கு எண்ணிக்கை அனைத்து தொகுதிகளுக்கும் அக்டோபர் 24-ம் தேதி

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்கு எண்ணிக்கை அனைத்து தொகுதிகளுக்கும் அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும்.

12:34 (IST)21 Sep 2019
விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்!செப்டம்பர் 23ம் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

12:28 (IST)21 Sep 2019
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு

மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். மஹாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

12:23 (IST)21 Sep 2019
மகாராஷ்டிராவில் 8.94 கோடி வாக்காளர்கள்

மகாராஷ்டிராவில் 8.94 கோடி வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிட்டார் சுனில் அரோரா. கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பிரசாரம் செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

12:20 (IST)21 Sep 2019
தேர்தல் முன் ஏற்பாடுகள்

தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து பேசிய சுனில் அரோரா, ‘ஓவ்வொரு புதிய தேர்தலும் புதிய பாடங்களை தருகிறது. தேர்தல் அதிகாரிகள், விசாரணை அமைப்புகளுடன் விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறோம்.’ என்றார்.

12:10 (IST)21 Sep 2019
நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்க வாய்ப்பு

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. புதுவை காமராஜர் தொகுதி தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம்.

12:07 (IST)21 Sep 2019
சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் நிகழ்வை பதிவு செய்கிறார்கள்.

11:46 (IST)21 Sep 2019
தேர்தல் நடத்தை விதிகள்

மஹாராஷ்டிரா சட்டமன்ற ஆயுள், நவம்பர் 9-ம் தேதி முடிகிறது. ஹரியானா சட்டமன்றத்தின் ஆயுள் நவம்பர் 2-ம் தேதி முடிகிறது. இன்று தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

11:28 (IST)21 Sep 2019
மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட இருக்கிறது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டமன்ற ஆயுள், நவம்பர் 9-ம் தேதி முடிகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தின் ஆயுள் நவம்பர் 2-ம் தேதி முடிகிறது. அந்தத் தேதிகளுக்குள் புதிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

அந்த அடிப்படையில் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் அட்டவணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார்கள்.

Web Title:

Election commission of india press conference today live

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close