Advertisment

இலவச திட்டங்கள், நிதி.. அரசியல் கட்சிகள் பதிலளிக்க விரும்பும் தேர்தல் ஆணையம்!

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் அதற்கான திட்டங்கள், நிதி நிலை அறிக்கை குறித்து விளக்கம் கேட்க விரும்புகிறது

author-image
WebDesk
New Update
Election Commission wants parties to disclose cost of revdi and how it will be funded

இலவசங்கள் அல்லது நலன்களை வரையறுப்பதற்கு சட்டமியற்ற இடமில்லை என்ற உண்மையை உணர்ந்து - உச்சநீதிமன்றம் இலவசங்கள் மனுவை விசாரித்தது.

அரசியல் கட்சிகள் மத்தியில் இலவசங்கள் (ரெவ்டி கலாசாரம்) தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு ஆலோசனை கட்டுரையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் அதற்கான திட்டங்கள், நிதி நிலை அறிக்கை குறித்து விளக்கம் கேட்க விரும்புகிறது.

Advertisment

முன்னதாக இலவசங்கள் அல்லது நலன்களை வரையறுப்பதற்கு சட்டமியற்ற இடமில்லை என்ற உண்மையை உணர்ந்து - உச்சநீதிமன்றம் இலவசங்கள் மனுவை விசாரித்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் அத்தகைய வாக்குறுதிகள் மற்றும் நிதியுதவித் திட்டத்தை அறிவிப்பதற்கான காரணத்தை விரிவாகக் கூற விரும்பியது.

அப்போது, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதைத் தடுக்க முடியாது என்றாலும், இதனை அறிந்துகொள்ள வாக்காளருக்கும் உரிமை உண்டு என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே தேர்தல் ஆணையம் கட்சிகள் மற்றும் மாநில அரசு அல்லது மத்திய அரசு மூலம் விரிவான வெளிப்பாடுகளை கோரியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் அரசியல் கட்சிகளை ஒப்பிட்டு பார்த்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பதை புரிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளரும், மத்திய நிதிச் செயலாளரும் எப்போது எங்கு தேர்தல் நடந்தாலும் - வரி மற்றும் செலவின விவரங்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.

இதில், வாக்குறுதியின் நிதி அளவுகோலை உருவாக்குவதே யோசனை திட்டமாகும். அதிலும், விவசாயக் கடன் தள்ளுபடி என்றால், அது அனைத்து விவசாயிகளுக்கும் அல்லது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்குமா என்பதை உறுதி செய்யும். மேலும் இந்தத் திட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதித் திட்டம் குறித்தும் பேசப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment