Election Results 2019: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன.
இந்தியா முழுவதும் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முரை பிரதமராகிறார்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க எப்போதும் பெரும் பின்னடைவையே சந்திக்கும். ஆனால் இந்த முறை அது சற்று மாறியிருக்கிறது.
தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் 23 இடங்களைப் பிடித்து முதன் முறையாக தென்னகத்தில் வெற்றி கனியை பறித்திருக்கிறது பா.ஜ.க
இதற்கு முன் 2009 மக்களவைத் தேர்தலில் 19 இடங்களையும், 2014-ல் 17 இடங்களையும் கர்நாடகாவில் பா.ஜ.க வென்றிருந்தது.
கர்நாடக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகா அர்ச்சுன கார்கே, ஹெச்.டி.தேவ கவுடா, வீரப்ப மொய்லி, கே.ஹெச்.முனியப்பா உள்ளிட்டவர்கள் இருந்தும், பா.ஜ.க இங்கு பெரும் வெற்றி பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
மாநிலத்தின் வடக்கு, மத்திய மற்றும் கடலோர பகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியிருக்கிறது. தெற்கு-பெங்களூர் ரூரல், ஹாசன், சாமராஜ்நகர் மற்றும் மத்திய பெங்களூரு ஆகிய 4 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு சென்றது. மாண்டியாவில், சுயேட்சை வேட்பாளர் சுமலதா கர்நாடக முதல்வர் எச்.டி.குமார்சுவாமி மகன் நிகில் குமாரசாமியை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான ஆனந்த் குமார் ஹெக்டே, ஷோபா கரண்ட்லாஜே, நளின் கதீல் ஆகியோர் கடலோர கர்நாடகாவில் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.
பா.ஜ.க-வின் இந்த வெற்றி கர்நாடகவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியை உடைக்கும் என்கிறார்கள் சிலர்.
பிரதமர் மோடி மற்றும் பாலகோட் தாக்குதல் ஆகியவை கர்நாடகாவில் 22 சீட்டுகளுக்கு மேல் பாஜக-வுக்கு வெற்றியை பெற்று தரும் என தேர்தலுக்கு முன்னதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
அங்கு 2 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், குந்த்கோலில் காங்கிரஸும், சின்சோலியில் பாஜக-வும் வெற்றி பெற்றிருக்கின்றன.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 104 இடங்களைக் கொண்டுள்ள பா.ஜ.க, 115 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் ஜே.டி. (எஸ்) ஆட்சியை அகற்றப் பார்க்கிறது.
224 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை 113.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.