Elections Results 2017 Live Updates: குஜராத், ஹிமாசல பிரதேசம் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் மிக கவனமாகவும் ஆர்வமாகவும் உற்று நோக்கப்படுகிறது.
Elections Results 2017 Live Updates : குஜராத், ஹிமாசல பிரதேசம் இன்று வாக்கு எண்ணிக்கை
குஜராத், ஹிமாசல பிரதேசம் வாக்கு எண்ணிக்கையின் நேரடி நிகழ்வுகளை ‘ஐஇ தமிழ்’ ‘லைவ்’வாக தருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது.
குஜராத்தின் 14-வது சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் இது! மொத்தம் 182 தொகுதிகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த 2012 தேர்தலில் இங்கு பாஜக 115 தொகுதிகளை ஜெயித்து, அறுதிப் பெரும்பான்மை ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்தியது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களை மட்டுமே வைத்திருந்தது.
Assembly elections results 2017 LIVE Updates
குஜராத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள் பாஜக சுலபமாக ஜெயிக்கும் என்றே கூறின. எனவே வாக்குப் பதிவுக்கு முன்தினம் பாஜக மாநில தலைவர் ஜிது வஹானி நம்பிக்கையுடன் காணப்பட்டார். ‘குஜராத் மக்கள் தங்கள் தேர்வை ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம் தருவார்கள். பாஜக ஆட்சியின் கீழ் குஜராத்தின் வளர்ச்சி தொடரும்’ என்றார் அவர்.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கியும் தங்களுக்கு வெற்றி உறுதி என்றே கூறினார். ‘மாநிலத்தின் 4 மண்டலங்களிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெறும். மொத்தம் 120 இடங்களையாவது வெல்வோம்’ என்றார் அவர். ‘இந்தத் தேர்தல் பாஜக.வுக்கும் குஜராத் மக்களுக்கும் இடையிலான மோதல். குஜராத் மக்களின் பிரதிநிதியாக நாங்கள் போரிடுகிறோம்’ என ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் கூறினார் பாரத்சிங் சோலங்கி.
குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வெற்றி. பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— DR V MAITREYAN (@maitreyan1955) December 18, 2017
குஜராத் தேர்தலில் பாஜக.வின் பிரசாரம் முழுவதுமே பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மையமாக வைத்தே நடந்தன. பாஜக.வின் பிரசார ‘வாகனத்தை’ பிரதமர் நரேந்திர மோடியே முன்னால் அமர்ந்து இயக்க, மாநில முதல்வர் விஜய் ரூபானியும் இதர தலைவர்களும் பாதுகாப்பாக பின்னால் அமர்ந்திருந்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தை விட்டு சென்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், பாஜக.வுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்புதான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் ராகுல் காந்தி. அவர் குஜராத்தில் 4 கட்டங்களாக பிரசாரம் செய்திருக்கிறார். 22 ஆண்டுகளாக குஜராத்தில் அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸை இந்த முறை அமர்த்திவிட வேண்டும் என்பது அவர்களது கணக்கு!
ஹிமாசல பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்த தொகுதிகள் 68! கடந்த தேர்தலில் அங்கு காங்கிரஸ் 36 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 28 இடங்களை பிடித்திருந்தது. இந்த முறை அங்கும் பாஜக.வே ஜெயிக்கும் என எக்ஸிட் போல் கணிப்புகள் கூறின.
பிற்பகல் 2.30 : குஜராத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக 24-ஐயும், காங்கிரஸ் 19-ஐயும் கைப்பற்றின. அது தவிர, பாஜக 74 தொகுதிகளிலும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தமாக சுமார் 100 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக இருக்கிறது.
ஹிமாசல பிரதேசத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளில் பாஜக 4-ஐயும், காங்கிரஸ் 2-ஐயும் கைப்பற்றின. பாஜக 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எனவே இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே அமைகிறது.
பகல் 12.15 : ‘தேர்தல் வெற்றிக்கு எந்த அலையும் அவசியம் இல்லை’ என இந்தத் தேர்தலில் மோடி நிரூபித்திருப்பதாக சொல்கிறார்கள், விமர்சகர்கள். பிரதமர் மோடி ஒரு பக்கம் தீவிர பிரசாரம் செய்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாமல் ராகுல் காந்தியும், ஹர்திக் பட்டேலும் பிரசாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bravo @INCIndia @OfficeOfRG Great Effort. We are very much battle ready and fighting fit. @narendramodi @BJP4India in #Gujarat are like @RafaelNadal in @rolandgarros if we have pushed them to the 5th set here, we will prevail on other surfaces (states)
— Karti P Chidambaram (@KartiPC) December 18, 2017
பகல் 12 மணி : பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்தில் பாஜக தலைமை அலுவலகம் வருகிறார். தொண்டர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார். ராகுல் காந்தியின் 24, அக்பர் தெரு இல்லத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வுடன் காணப்படுகின்றனர். ராகுலும் கட்சி அலுவலகம் வந்து, இரு மாநில தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிடுவார் என தெரிகிறது.
A clear mandate to @BJP4India in #Gujarat & #HimachalPradesh is a stamp of approval for PM @narendramodi ji's policies & reforms.
The writing on the wall is clear for Karnataka govt. People want development & good governance. They will pack off @siddaramaiah and his flock. pic.twitter.com/uf7cLh4itb
— B.S. Yeddyurappa (@BSYBJP) December 18, 2017
பகல் 11.20 : குஜராத்தில் பாஜக முன்னணி நிலவரம் 104-76. டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கின.
Development Wins against Dynasty politics. @BJP4India leads ahead in Gujarat & Himachal assembly elections. This shows people support for our Hon'ble PM @narendramodi Ji & people welfare focused initiatives.#ElectionResults
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 18, 2017
பகல் 11.10 : குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பாஜக வெற்றிமுகத்தில் இருப்பதைத் தொடர்ந்து அதைக் கொண்டாடும் வகையில் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார்.
காலை 10.48 : நாடாளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடி காரை விட்டு இறங்கியதும், கேமரா ஃப்ளாஷ்களுக்கு மத்தியில் இரட்டை விரலை விரித்து வெற்றிச் சின்னம் காட்டினார். இரு மாநிலங்களிலும் பாஜக.வின் வெற்றி முகத்தை, மோடியின் வெற்றியாக நாடு முழுவதும் பாஜக.வினர் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இமாலய வெற்றி! பிரதமர் திரு @narendramodi அவர்களின் முன்னேற்ற திட்டங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துள்ள #குஜராத் #இமாச்சலப்பிரதேச மக்களுக்கு பாராட்டுக்கள். இந்தியாவை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற பெரும் முயற்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரதரமரின் கரத்தை (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 18, 2017
காலை 10.45 : நாடாளுமன்ற அவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
காலை 10.25 : முன்னணி நிலவரம் தெரிந்த 167 தொகுதிகளில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரப்படி பாஜக 49 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 42 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது.
காலை 10.20 : ‘மோடி, அமித்ஷா இவ்வளவு முயன்ற பிறகும் காங்கிரஸுக்கு தொகுதிகள் கூடியிருப்பது, பாஜக.வுக்கு தோல்விதான்’ என கருத்து தெரிவித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சால பிரதேசத்தில் பாஜக வெற்றி.
— NARAYANAN THIRUPATHY (@Narayanan3) December 18, 2017
காலை 10.15 : குஜராத்தில் பாஜக 106-74 என முன்னணி வகிக்கிறது. கடந்த முறையைப் போலவே அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவுக்கு முன்னணி நிலவரங்கள் வருகின்றன.
காலை 10.00 : ஹிமாசல பிரதேசத்தில் பாஜக.வின் முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் பின் தங்கியிருக்கிறார். ஆனாலும் பாஜக 41-21 என முன்னிலையில் இருக்கிறது.
காலை 9.50 : ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் சுற்றுலாப் பயணிகளையும் தேர்தல் ரிசல்ட் காய்ச்சல் விடவில்லை. அங்குள்ள சுற்றுலா மையம் முன்பு தேர்தல் முடிவைக் காண அவர்கள் திரண்டனர்.
காலை 9.45 : மூன்று ரவுண்டுகள் முடிவில் பாஜக 100 இடங்களிலும் காங்கிரஸ் 81 இடங்களிலும் முன்னிலை பெற்றன. வதோதராவின் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், அகமதாபாத்தின் தாரியாபூர் தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. ஹிமாசல பிரதேசத்தில் பாஜக 41-23 என முன்னிலையில் உள்ளது.
காலை 9.40 : குஜராத்தில் மறுபடியும் பாஜக முன்னிலை பெற்றதும் பங்குச் சந்தை நிமிர ஆரம்பித்தது. 600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் புள்ளிகள், சற்றே நிமிர்ந்து 400 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் இருந்தது.
As BJP takes lead again, markets take comfort ... Sensex recovers almost 400 points, now down around 300 points @IndianExpress
— Sandeep Singh (@Tweetsandeep) December 18, 2017
காலை 9.35 : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறுகையில், ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நடக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்’ என்றார்.
காலை 9.20 : குஜராத்தில் பாஜக.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் பங்குச் சந்தையில் தெரிய வந்தது. காலை நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் 600 வரை குறைந்தன.
காலை 9.15: குஜராத்தில் வாக்குப்பதிவு தொடங்கி ஒரு மணி நேரம் கடந்த நிலையில் காங்கிரஸ் 90-88 என முன்னிலை பெற்றது. இந்த முன்னிலையை காங்கிரஸ் தக்க வைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காலை 9.00 : ஹிமாசல பிரதேசத்தில் ஆரம்பகட்டத்தில் பாஜக.வே முன்னிலை பெற்றது.
காலை 8.30 : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ராஜ்கோட் மேற்கு தொகுதியில் முன்னணியில் இருக்கிறார். குஜராத்தில் முன்னணி நிலவரம் தெரிந்த தொகுதிகளில் பாஜக 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் முந்துகின்றன.
காலை 8.15 : ஹிமாசல பிரதேசம் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பாஜக 3-2 என முன்னிலை வகித்தது. குஜராத்தில் 33 இடங்களில் பாஜக.வும், 8 இடங்களில் காங்கிரஸும் முன்னிலை பெற்றன. இவை அனைத்துமே தபால் வாக்குகள்தான். வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் 9 மணிக்கு சற்று முன்னதாக எண்ண ஆரம்பிக்கப்படும்.
காலை 8.10 : முதல் முன்னணி நிலவரம் குஜராத்தில் இருந்து கிடைத்தது. முன்னணி வெளியான 8 தொகுதிகளில் பாஜக-6, காங்கிரஸ்-2 என முந்தின. அந்தத் தொகுதிகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட கட்சிகளின் வசம் இருந்தவைதான். அதனால் இரு கட்சிகளுக்கும் லாபமோ, இழப்போ இல்லை.
காலை 8 மணி : குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.