மாநிலங்களவை தேர்தல் : முடிவுகள் இன்று மாலை அறிவிப்பு!

அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே(23.3.18) அறிவிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 எம்.பிக்களின் பதவிக்கான தேர்தல் மாநிலங்களவையில் இன்று நடக்கிறது.

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 58 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 25 இடங்களுக்கான தேர்வு இன்று(23.3.18) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே(23.3.18) அறிவிக்கப்படுகிறது. இவர்களில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மட்டும் 19 பேர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர்.  காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உத்தரபிரதேச தொகுதிக்கு  போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் அபிஷேக் மனு சிங்வி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். இது தவிர கர்நாடகத்தில் 4 பேரும், ஜார்க்கண்டில் 3 வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் 2 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியிடம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். . அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு மேலும் 18 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நரேஷ் அகர்வாலின் மகன் நிதின், சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருக்கிறார். இருந்த போதும்,  அவர் அணி மாறி பாஜகவுக்கு ஆதரவாக  வாக்களிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியை பொருத்த வரையில்  மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர் ஜெயா பச்சன் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகிவிட்டது. எனவே மீதமுள்ள  10 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு கிடைத்தால் பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்றும் நம்படுகிறது.

பெரும் பரபரப்புக்கு இடையில் நடைப்பெறும் இந்த தேர்தலுக்கு மாநிலங்களவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LIVEUPDATES இதோ…. 

மாலை 6. 30 : கேரளாவில் இடது சாரிகள் ஒரு இடத்தையும், தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி மூன்று இடங்களையும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்று இடங்களையும், கர்நாடகாவில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பா.ஜ.க ஒரு இடத்தையும், சட்டீஸ்கரில் பா.ஜ.க ஒரு இடத்தையும், ஜார்கண்டில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின.

மாலை 6. 00 :  சமாஜ்வாதி கட்சி  சார்பில் நிறுத்தப்பட்டிருந்த அமிதாப் பச்சனின் மனைவி  ஜெயா பச்சன் வெற்றி பெற்றார்.

மாலை 5.00 : உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில், அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் ஆகியோர் அடங்கும்.

மதியம்  2.30: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்ரவிட்டது.

மதியம் 2.00 :  இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், இரண்டு முறை வாக்களித்தாக சர்ச்ச்சை எழுந்தது.

மதியம் 1.00: சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. நித்ன் அகர்வால், பா.ஜ.க தலைவர் நரேஷ் அகர்வால், பா.ஜ. எம்.எல்.ஏ. சுரேஷ் ரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

மதியம் 12. 00 : பா.ஜ. எம்.எல்.ஏ. சித்தார்த் நாத் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் ராஜ்யசபைக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர்

காலை 11. 15: பாஜகவின்  ஒன்பது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று , நரேஷ் அகர்வால் மகன் நிதின் அகர்வால் கூறினார்.

காலை 11.00 : கேரளாவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 10.40 : தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 3 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்துக் கொண்டனர்.

காலை 10.30 : மேற்கு வங்க சட்டமன்ற தொகுதியான  கொல்கத்தாவில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய எம்.எல்.ஏக்கள் வரிசையா நின்றனர்.

 

காலை 10. 00: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் தனது  கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்தார்.

காலை 9.30 :  பெங்களூரில்  ஜாவேத்கர், எடியூரப்பா  ஆகியோர் பா.ஜ.க வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்தனர்.

காலை 9.10 : பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று எஸ்.பி. தலைவர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்தார்.

காலை 9.00 : மாநிலங்களவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close