Advertisment

தேர்தல் பத்திரங்கள்: முதல் 100 நன்கொடையாளர்களில், பல அறியப்படாத நிறுவனங்கள்

எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பட்டியலில், முதல் 100 நன்கொடையாளர்களில் ஒப்பீட்டளவில் அறியப்படாத பல நிறுவனங்கள் உள்ளன.

author-image
WebDesk
New Update
Electoral Bonds

Electoral Bonds: Among top 100 donors, many unknown entities

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எஸ்.பி.. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் பட்டியலில், முதல் 100 நன்கொடையாளர்களில் அறியப்படாத பல நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அவை ரூ.105 கோடி முதல் ரூ.27.5 கோடி வரை பங்களித்துள்ளன.

Advertisment

சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 105 கோடி

2006 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 100 கோடி      

கொல்கத்தாவில் அமைந்துள்ள ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 1943 இல் நிறுவப்பட்டது. ஃபாரெஸ்ட்ரி, லாகிங் மற்றும் பிற துறைகளுடன் தொடர்புடையது. முகுந்த் ருங்தா மற்றும் சித்தார்த் ருங்தா ஆகியோர் இதன் இயக்குனர்கள்.

ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 85.5 கோடி         

1988 இல் கொல்கத்தாவில் பதிவுசெய்யப்பட்ட ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் விவசாயம் அல்லாத இடைநிலைப் பொருட்கள், கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றின் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

M/s. SN மொகந்தி: ரூ 45 கோடி                                                               

M/s. S.N. மொகந்தி நிறுவனம், ஒடிசாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக இரும்பு தாது, மாங்கனீசு மற்றும் பாக்சைட் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ளது.

ரித்விக் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 45 கோடி

ஹைதராபாத்தில் 1999 இல் நிறுவப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் நிறுவனம், நீர்மின் திட்டங்கள், கான்கிரீட் அணைகள், ஸ்பில்வேஸ், சோலார் திட்டங்கள், சுரங்கப்பாதைகள், நீர்ப்பாசன கால்வாய்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஹவுஸிங் காலனிஸ் கட்டுவதில் செயலில் உள்ளது.

சாஸ்மல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்: ரூ 44 கோடி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், கிடங்குத் துறையில் (warehousing) துறையில் செயல்பட்டு வருகிறது.

டிரான்ஸ்வேஸ் எக்சிம் பிரைவேட் லிமிடெட்: ரூ 41.5 கோடி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிறுவனம் கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதில் ஈடுபட்டுள்ளது.

ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்: ரூ 40 கோடி  

ஹைதராபாத்தில் உள்ளது, இந்தியாவில் முன்னணி மற்றும் மிகப்பெரிய டிரான்ஸ்ஃபார்மர் உற்பத்தியாளர்கள் மற்றும் EPC ஒப்பந்ததாரர்கள், என்று நிறுவனம் கூறுகிறது.

மாடர்ன் ரோட் மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 40 கோடி         

மும்பையை சேர்ந்த நிறுவனம் கட்டுமானம், சிவில் இன்ஜினியரிங் துறையில் ஈடுபட்டுள்ளது; சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை வடிவமைத்து மேம்படுத்துகிறது.

NEXG Devices Pvt Ltd: ரூ. 35 கோடி  

NCR இல் உள்ள குருகிராமில், ந்த நிறுவனம் டெலிவிஷன், ரேடியோ ரிஸிவர், சவுண்ட் அல்லது வீடியோ ரெக்கார்டிங் மற்றும் தொடர்புடைய பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

SWAL கார்ப்பரேஷன் லிமிடெட்: ரூ 35 கோடி

மும்பையைச் சேர்ந்த நிறுவனம் வேளாண் ரசாயனங்களை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

SAFAL கோயல் ரியாலிட்டி LLP: ரூ 35 கோடி                           

அகமதாபாத்தைச் சேர்ந்த LLP, நகரின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்

LCC புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 31.5 கோடி      

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனம், ஆபரேட்டர்களுடன் கட்டுமான அல்லது இடிக்கும் உபகரணங்களை வாடகைக்கு விடுவதில் ஈடுபட்டுள்ளது.

கம்னா கிரெடிட் & ப்ரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ 30.5 கோடி

கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனம், நிதி நிறுவனங்களால் நடத்தப்படுவதைத் தவிர, நிதி இடைநிலையில் ஈடுபட்டுள்ளது.

பென்குயின் டிரேடிங் & ஏஜென்சீஸ் லிமிடெட்: ரூ 27.5 கோடி           

கொல்கத்தா நிறுவனம் உலோக வேலை, சேவை நடவடிக்கைகள் மற்ற ஃபேப்ரிகேடட் உலோக பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

Read in English: Electoral Bonds: Among top 100 donors, many unknown entities

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment