Advertisment

தேர்தல் பத்திரம்; பா.ஜ.க, டி.எம்.சி, காங்., - லாபத்தை விட பல மடங்கு நன்கொடை அளித்த 8 நிறுவனம்

பா.ஜ.க, டி.எம்.சி மற்றும் காங்கிரசுக்கு நன்கொடை அளித்த 8 நிறுவனங்கள், ஏப்ரல் 2019 முதல் 4 நிதியாண்டுகளில் அவர்கள் ஈட்டிய மொத்த லாபத்தை விட பல மடங்கு நன்கொடையாக அளித்திருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Electoral bonds Among top donors to BJP TMC and Congress 8 unlisted firms spent many times their profit Tamil News

பா.ஜ.க, டி.எம்.சி மற்றும் காங்கிரசுக்கு நன்கொடை அளித்த 4 நிறுவனங்கள் அந்த நிதியாண்டுகளில் தங்களது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவித்திருக்கின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிரடி உத்தரவு போட்டது. 

Advertisment

இந்த உத்தரவின்படி, தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில், அரசியல் கடசிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் பற்றி அலசிய ஆராயப்பட்டு வருகிறது.  நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும், நன்கொடை வாங்கிய கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன என்பது குறித்த விரிவான விளக்க கட்டுரைகள் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் வெளியிடப்பட்டு வருகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Among top donors to BJP, TMC and Congress, 8 unlisted firms spent many times their profit

லாபத்தை விட பல மடங்கு நன்கொடை அளித்த 8 நிறுவனம் 

அந்த வகையில், பா.ஜ.க, டி.எம்.சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பட்டியலிடப்படாத 17 நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. இந்த 17 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள், ஏப்ரல் 2019 முதல் நான்கு நிதியாண்டுகளில் அவர்கள் ஈட்டிய மொத்த லாபத்தை விட பல மடங்கு நன்கொடையாக அளித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் உள்ள நான்கு நிறுவனங்கள் அந்த நிதியாண்டுகளில் தங்களது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவித்திருக்கின்றன. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் பட்டியலில் ரூ. 1,368 கோடியுடன் லாட்டரி மார்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் நான்கு ஆண்டுகளில் ரூ.368 கோடி மட்டுமே ஒட்டுமொத்த லாபம் ஈட்டியிருக்கிறது. ஆனால், ரூ.542 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை டி.எம்.சி கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இதேபோல், அந்த நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் முறையே ரூ.100 கோடி மற்றும் ரூ.50 கோடியை பெற்றுள்ளன. 

பட்டியலிலுள்ள மற்ற 7 நிறுவனங்களும் அந்த காலகட்டத்தில் ரூ. 85 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கணக்கு காட்டி விட்டு ரூ.954 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன. இந்த கட்சிகளில் பா.ஜ.க ரூ 530 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் (ரூ 175 கோடி) மற்றும் டி.எம்.சி (ரூ 126 கோடி) கட்சிகள் உள்ளன.

2019-20 முதல் 2022-23 வரை 4 நிறுவனங்கள் ஒட்டுமொத்த நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளன. கொல்கத்தாவைச் சேர்ந்த எம்.கே.ஜே குழுமத்தின் சாஸ்மல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் அடைந்த நஷ்டம் ரூ.1.67 கோடியாக இருந்தது, ஆனால் ரூ.44 கோடியை தேர்தல் பத்திரங்களுக்கு செலவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எஸ்.இ.பி.சி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.98.48 கோடி நஷ்டம் அடைந்து ரூ.40 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது. 

கொல்கத்தாவின் ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 83.13 கோடி நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது. ஆனால், ரூ. 112.50 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது. சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.36.65 கோடி நஷ்டம் அடைந்த நிலையில், ரூ.105 கோடிக்கு பத்திரங்களை வாங்கியிருக்கிறது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (ரூ. 410 கோடி நஷ்டம் - தேர்தல் பாத்திரம் வாங்கியது - ரூ. 109.59 கோடி) லாபத்தை விட அதிகமாக நன்கொடை அளித்த மற்ற மூன்று நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ள இரண்டு கொல்கத்தாவை தளமாகக் கொண்ட எம்.கே.ஜே குழுமத்தின் கெவென்டர் ஃபுட் பார்க் ( ரூ. 195 கோடி நஷ்டம் - தேர்தல் பாத்திரம் வாங்கியது - ரூ. 15.63 கோடி) மற்றும் டிரான்ஸ்வேஸ் எக்சிம் பிரைவேட் லிமிடெட் (ரூ. 47 கோடி நஷ்டம் - தேர்தல் பாத்திரம் வாங்கியது -ரூ. 9.66 கோடி ).

மேற்கூறிய எட்டு நிறுவனங்களைத் தவிர, பட்டியலிடப்படாத 17 டாப் நன்கொடையாளர்களில் இரு நிறுவனங்கள் 2019-20 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மொத்த லாபத்தில் பாதிக்கும் மேலான பத்திரங்களை வாங்கியுள்ளனர். அவை அகமதாபாத்தைச் சேர்ந்த பிரரம்ப் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 78.75 கோடிக்கு எதிராக ரூ. 112.18 கோடி லாபம்), மற்றும் மும்பையின் பி.கே.சி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 21.97 கோடி லாபத்திற்கு எதிராக ரூ. 20 கோடி).

மொத்தம் 24 நிறுவனங்கள் (17 பட்டியலிடப்படாதவை மற்றும் 7 பட்டியலிடப்பட்டவை) பா.ஜ.க, டி.எம்.சி, மற்றும் காங்கிரஸுக்கு நன்கொடை அளித்த முதல் பத்து நிறுவனங்களாகும். காங்கிரஸின் முதல் 10 பட்டியலில் உள்ள இரண்டு நிறுவனங்களில் யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் சித்தி டிரேடிங் ஆகியவை உள்ளன. இந்த 24 நிறுவனங்களில் 17 பட்டியலிடப்படாத நிறுவனங்கள்.

வேதாந்தா லிமிடெட், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ் லிமிடெட், பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், ஐஎஃப்பி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மதன்லால் லிமிடெட் மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இந்த ஆய்வில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2019ல் மதன்லால் லிமிடெட் மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகியவை தேர்தல் பத்திரங்களுக்கு தங்கள் லாபத்தை விட அதிகமாக நன்கொடை அளித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment