Advertisment

ரூ. 825 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய சுரங்க - இரும்பு நிறுவங்கள்: கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி

சுரங்க - இரும்பு நிறுவங்களில் வேதாந்தா லிமிடெட் ரூ.376 கோடியும், எஸ்சல் மைனிங் ரூ.224.5 கோடியும், ஜிண்டால் ஸ்டீல் ரூ.123 கோடியும், டெம்போ ரூ.1.5 கோடியும் செலவிட்டு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

author-image
WebDesk
New Update
Electoral bonds data Mining steel majors spent Rs 825 crore among them firms awaiting green nod Tamil News

வேதாந்தா லிமிடெட் நன்கொடையாக வழங்கிய ரூ.376 கோடியில், ஜனவரி 2022ல் ரூ.98 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் வாங்கப்பட்டன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நிலையில், தற்போது அவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் வெளியாகி வருகின்றன.

Advertisment

அந்த வகையில், 2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது தொடர்பாக, இந்தியாவின் சுரங்கம் மற்றும் இரும்பு (மைனிங் & ஸ்டீல்) துறையில் முன்னணி நிறுவங்களாக வலம் வரும் வேதாந்தா லிமிடெட், ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் (ஜே.எஸ்.பி.எல்), எஸ்சல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (இ.எம்.ஐ.எல்) மற்றும் டெம்போ ஆகிய நிறுவனங்கள் இணைந்து ரூ.825 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த நிறுவனங்களில் ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.100 கோடியும், வேதாந்தா லிமிடெட் ரூ.376 கோடியும், எஸ்சல் மைனிங்  ரூ.224.5 கோடியும், ஜிண்டால் ஸ்டீல் ரூ.123 கோடியும், டெம்போ ரூ.1.5 கோடியும் செலவிட்டு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

வேதாந்தா லிமிடெட் நன்கொடையாக வழங்கிய ரூ.376 கோடியில், ஜனவரி 2022ல் ரூ.98 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த பத்திரங்கள் வாங்கப்படுவதற்கு முன்பு தான் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. 

செசா கோவா நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது சுரங்க நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் இது ஒடிசாவில் குறிப்பிடத்தக்க சுரங்களை கொண்டுள்ளது. அதேவேளையில், இரும்பு தாது, எண்ணெய் மற்றும் எரிவாயு, தாமிரம், அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றில் வேதாந்தா நிறுவனம் பங்கு கொண்டுள்ளது

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் சுரங்கம், மின்சாரம் மற்றும் எஃகு ஆகியவற்றை எடுத்து வருகிறது.  இவை பெரும்பாலும் சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் ஜார்கண்டில் குவிந்துள்ளன. அக்டோபர் 2022 மற்றும் நவம்பர் 2023 க்கு இடையில் அந்த நிறுவனம் அதன் அனைத்து நன்கொடைகளையும் வழங்கியது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றான எஸ்சல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 'பண்டர் டைமண்ட்' திட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2019 இல் சுரங்க குத்தகையை வாங்கி இருந்தாலும், உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது.

இந்த நிறுவனம் 2019 மற்றும் 2022 க்கு இடையில், ரூ 224.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. 2019 இல் ரூ 50 கோடி, 2020 இல் ரூ 20 கோடி, 2021 இல் ரூ 104.5 கோடி, 2022 இல் ரூ 50 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. 

2020 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதிக்கான திட்டத்தின் விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது, பன்னா புலிகள் காப்பகத்திற்கு சுரங்கங்கள் அருகாமையில் இருப்பதால் முதலில் காடு மற்றும் வனவிலங்கு அனுமதிகளைப் பாதுகாக்க எஸ்சல் மைனிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வன அனுமதிக்கான நிறுவனத்தின் முன்மொழிவுக்கு எதிராக சுற்றுச்சூழல் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது.

மற்றொரு உதாரணம், நொய்டாவை தளமாகக் கொண்ட பல்டோடா குழுமத்தின் முதன்மை நிறுவனமான எம்.எஸ்.பி.எல் லிமிடெட் (MSPL Ltd) நிறுவனம். பல்வேறு இரும்புத் தாது சுரங்கத்தில் முதலீடு செய்துள்ள இந்த நிறுவனம், ஏப்ரல் 2019 இல் ரூ. 1 கோடி மற்றும் ஏப்ரல் 2023 இல் ரூ. 3 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.

இந்த நிறுவனம், ஜனவரி 2022 இல், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் இரும்புத் தாது பதப்படுத்தும் ஆலை (26.44 ஹெக்டேருக்கு மேல் 5 ஆண்டுக்கு மில்லியன் டன்கள்)  மற்றும் பெல்லட் ஆலைக்கு (3 ஆண்டுக்கு மில்லியன் டன்கள்) நவம்பர் 2021 இல் பெற்ற குறிப்பு விதிமுறைகள் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. 

ஏறக்குறைய இரட்டிப்பு உற்பத்தி திறன், தூசி உமிழ்வு விதிமுறைகளில் தளர்வு, நிலத்தடி நீரை பயன்படுத்த தற்காலிக அனுமதி, உத்தேச ஆலைக்கும் துங்கபத்ரா நதிக்கும் இடையே உள்ள தூரத்தை 200 மீட்டரிலிருந்து 22.6 கி.மீ வரை பகுத்தறிவு செய்து நீரியல் ஆய்வுக்கான தேவையை குறைப்பது போன்ற மாற்றங்கள் கோரப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் அமைச்சகம், பிப்ரவரி 2022 இல் அனுமதி நிபந்தனைகளை திருத்தியது.

நொய்டாவை தளமாகக் கொண்ட மற்றொரு நிறுவனம் ஜி.எ.ச்.சி.எல் லிமிடெட்  (GHCL Ltd). இந்த 2019 இல் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. செப்டம்பர் 2017 இல், ஜி.எ.ச்.சி.எல் குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள அதன் சோடா சாம்பல் தொழிற்சாலை மற்றும் கேப்டிவ் மின் உற்பத்தி நிலையத்தை நவீனமயமாக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. ஆனால், அமைச்சகத்தின் கேள்விகளுக்கு நிறுவனம் பதிலளிக்கவில்லை என்பதைக் கவனித்த சுற்றுச்சூழல் அமைச்சகம் நவம்பர் 2019 இல் இந்த திட்டத்தை கைவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment