Advertisment

தேர்தல் பத்திரங்கள்: ஆம் ஆத்மியின் டாப் 10 நன்கொடையாளர்கள் இங்கே

மார்ச் 2022 இல் நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதன் மூலம் கட்சிக்கு அதிக அளவில் நன்கொடைகள் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் பகிர்ந்துள்ள தரவு காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
Delhi CM Arvind Kejriwal

Delhi Chief Minister Arvind Kejriwal (Image source: PTI)

ஆம் ஆத்மி கட்சியின் முதல் 10 நன்கொடையாளர்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.52.4 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற 6 பேர் உள்ளனர். இந்த ஆறு நன்கொடையாளர்களில் ஒன்றான ஏவீஸ் டிரேடிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (Avees Trading Finance Pvt Ltd), ஆம் ஆத்மிக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்தது.

MKJ எண்டர்பிரைசஸ் லிமிடெட்; டோரண்ட் பவர் லிமிடெட்; மற்றும் டிரான்ஸ்வேஸ் எக்சிம் பிரைவேட் லிமிடெட் - மற்ற மூன்று நிறுவனங்கள். ஒவ்வொன்றும் ரூ. 7 கோடியை ஆம் ஆத்மிக்கு நன்கொடையாக அளித்தன.

மற்றவற்றில், கொல்கத்தாவைச் சேர்ந்த டிஸ்டில்லரி மற்றும் பாட்டிலிங் நிறுவனமான IFB அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.4 கோடி, புனேவைச் சேர்ந்த BG ஷிர்கே கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், ரூ.1 கோடி ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளித்த. இந்த நிறுவனம் உள்கட்டமைப்பு கட்டுமானம் மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குகிறது.

மேலே உள்ள ஆறு நிறுவனங்களும் கூட்டாக காங்கிரஸுக்கு ஆம் ஆத்மியை விட பல மடங்கு அதிகமாக நன்கொடை அளித்தன.

ஆம் ஆத்மிக்கான பிற சிறந்த நன்கொடையாளர்களில் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (ரூ. 8 கோடி), ஏசியன் டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (ரூ. 5 கோடி), பேர்ட் வேர்ல்டுவைட் ஃப்ளைட் சர்வீசஸ் (ரூ. 2 கோடி) மற்றும் அவான் சைக்கிள்ஸ் லிமிடெட் (ரூ. 1.4 கோடி) ஆகியவை அடங்கும்.

டெல்லியை தளமாகக் கொண்ட பேர்ட் வேர்ல்டுவைட் ஃப்ளைட் சர்வீசஸ், டிராவல் டெக்னாலஜி, விமான சேவைகள், ஹாஸ்பிடலிட்டி, ரிடெயில் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சர்வீஸ் பிரொவைடராக உள்ளது.

மார்ச் 2022 இல் நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி  பெற்றதன் மூலம் கட்சிக்கு அதிக அளவில் நன்கொடைகள் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் பகிர்ந்துள்ள தரவு காட்டுகிறது. 2021ஆம் ஆண்டு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு ரூ.1.85 கோடி மட்டுமே கிடைத்தது.

பிப்ரவரி 2022 இல் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜனவரியில் (2022) 3.4 கோடியைப் பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 2022 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் 126 தேர்தல் பத்திரங்களை மீட்டெடுத்ததன் மூலம் கட்சிக்கு ரூ.44.45 கோடி கிடைத்தது.

Read in English: Electoral bonds: Here are AAP’s top 10 donors

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aam Aadmi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment