State Bank Of India | Electoral Bonds: அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பத்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் அவ்வப்போது விற்பனை செய்யப்படும். இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் இந்த பத்திரங்கள் கிடைக்கும்.
இந்திய குடிமகனாக உள்ள யாரும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற, பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை பெற முடியும். அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள தங்களது கணக்கில் இந்த பத்திரங்களை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ள இயலும். இத்திட்டத்தில் நன்கொடை அளித்தவர் யார் என்றே தெரியாது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Electoral bonds over Rs 1,000 crore sold in poll month; Hyderabad tops sales
ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை
இந்நிலையில், தேர்தல் பத்திரத் திட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 4 அன்று மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனையை அறிவித்தது.
இந்த நிலையில், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலை ஒட்டி தேர்தல் பத்திரங்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், 400% அதிகமாக விற்பனையாகி உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.
தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை அணுகிய எஸ்.பி.ஐ வங்கியின் தரவுகளில், நவம்பர் 6 முதல் நவம்பர் 20 வரை நடைபெற்ற சமீபத்திய (29வது) தேர்தல் பாத்திரங்கள் விற்பனையின் போது ரூ. 1,006.03 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்பனை மூலம் மொத்த தொகையில் 99 சதவீதம் பணம் திரட்டப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்கஸின் மற்றொரு ஆர்.டி.ஐ பதிலில், எஸ்.பி.ஐ வங்கியின் தரவுகள் 2018 ஆம் ஆண்டில், நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரையிலான தேர்தல் பத்திரங்களின் 6வது தவணை விற்கப்பட்டபோது, மொத்த விற்பனை 184.20 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் அந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் சமீபத்திய விற்பனை (29வது தவணை) தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் (ரூ 359 கோடி), மும்பையில் (ரூ 259.30 கோடி), மற்றும் டெல்லியில் (ரூ 182.75 கோடி) அதிகம் விற்பனையாகியுள்ளது.
கடந்த காலத்தில் வழக்கமாக இருந்தபடி, தேர்தல் பத்திரங்களை பணமாக்குவதற்கு வந்தபோது, டெல்லி கிளையில் அதிகபட்ச தொகை (ரூ 882.80 கோடி) திரும்பப் பெறப்பட்டது. 81.50 கோடியுடன் ஐதராபாத் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தேர்தல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில், ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) ரூ. 31.50 கோடிக்கும், ராய்ப்பூரில் (சத்தீஸ்கரில்) ரூ. 5.75 கோடிக்கும், போபாலில் (மத்தியப் பிரதேசம்) ரூ. 1 கோடிக்கும் சேர்த்து தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. இருப்பினும், இந்த மூன்று மாநிலங்களில் எதுவும் பணமதிப்பீடு பதிவு செய்யவில்லை. மிசோரமில் எந்த விற்பனையும் பதிவு செய்யப்படவில்லை.
இந்தத் திட்டம் பெயர் தெரியாததற்கு உத்தரவாதம் அளிப்பதால், நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் பெயர்கள் தெரியவில்லை. ஆனால் அதிக நிதி ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் இருந்து வந்ததாகவும், தேசியக் கட்சிகளைச் சுட்டிக்காட்டி டெல்லியில் கட்சிகளுக்குச் சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல் 29 கட்டங்களாக தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் சேகரித்த மொத்தத் தொகை தற்போது 15,922.42 கோடியாக உயர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“