Advertisment

தேர்தல் பத்திரங்கள்: சீரம் நிறுவனம், நிப்பான் ஸ்டீல் தேர்தல் அறக்கட்டளை நன்கொடையாளர்கள் பத்திரங்கள் வழியில் செல்லவில்லை

2018 - 2019-ம் ஆண்டில், முதன்மை தேர்தல் அறக்கட்டளை நன்கொடையாளர்களில், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், ஜி.எம்.ஆர் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் ஏர் கார்கோ அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவை தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.

author-image
WebDesk
New Update
Terminal 1

புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் (Express photo: Ashish Kale)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2018 - 2019-ம் ஆண்டில், முதன்மை தேர்தல் அறக்கட்டளை நன்கொடையாளர்களில், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், ஜி.எம்.ஆர் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் ஏர் கார்கோ அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவை தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Electoral bonds: Serum Institute, Nippon Steel among electoral trust donors which didn’t take bond route

தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி கட்சிகளுக்கு நன்கொடை அளித்த பல நிறுவனங்களும் தேர்தல் அறக்கட்டளை வழியைப் பயன்படுத்தினாலும், ஐதராபாத்தை தளமாகக் கொண்ட கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இந்தியா தனியார் நிறுவனம், மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர் மேதா சர்வோ டிரைவ்ஸ் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் உட்பட, கடந்த ஐந்து ஆண்டுகளில் அறக்கட்டளைகள் மூலம் தேர்தல் நன்கொடை வழங்கிய முதல் 10 நன்கொடையாளர்களில் சில நிறுவனங்கள், பெயர் குறிப்பிடப்படாத பத்திரங்களைத் தேர்வு செய்யவில்லை.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2022-2023-ம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளையின் முதல் 10 நன்கொடையாளர்களில், ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் ரூ. 100 கோடியும், ஆர்சிலர் மிட்டல் டிசைன் அண்ட் இன்ஜினியரிங் சென்டர் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் மூலம் ரூ.25 கோடியும் வழங்கியுள்ளன. கடந்த வாரம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்களின் நன்கொடையாளர்கள் பட்டியலில் ஆர்சிலரின் பெயர் இடம் பெறாத நிலையில், ஆர்சிலர் மிட்டலின் செயல் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லட்சுமி நிவாஸ் மிட்டல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.35 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். 2019 லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருந்த ஏப்ரல் 18, 2019-ல் அவர் பத்திரங்களை வாங்கியதாக தரவு காட்டுகிறது. தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களின் பட்டியலில் சீரம் இன்ஸ்டிட்யூட் இல்லை என்றாலும், அதன் நிறுவனர் சைரஸ் பூனாவாலா தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

தேர்தல் அறக்கட்டளை திட்டம்

மேதா சர்வோ டிரைவ்ஸ் ரூ.30 கோடியும், மேதா டிராக்ஷன் எக்யூப்மென்ட் ரூ.5.01 கோடியும் 2022-23ல் ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக அளித்தன. இரண்டு நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்கள் வழியைப் பயன்படுத்தவில்லை. 2022-23-ம் ஆண்டில் அறக்கட்டளைகள் மூலம் இரண்டாவது பெரிய நன்கொடை அளித்த சீரம் இந்தியா நிறுவனம் 2022-23-ம் ஆண்டில் ரூ 50.25 கோடி நன்கொடை அளித்தது. ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.45 கோடியை நன்கொடையாக வழங்கிய சீரம் இந்தியா நிறுவனம் 2021-22-ல் 4-வது பெரிய நன்கொடையாளராகவும் இருந்தது.

2021-22 ஆம் ஆண்டில், ஆர்சிலர் மிட்டல், நிப்பான் ஸ்டீல் இந்தியா மற்றும் ஆர்சிலர் மிட்டல் டிசைன் மற்றும் என் ஜினியரிங் அண்ட் செண்டர் நிறுவனம் ஆகியவை அறக்கட்டளைகள் மூலம் முறையே ரூ.70 கோடி மற்றும் ரூ.60 கோடியுடன் முதல் இரண்டு நன்கொடையாளர்களாக இருந்தன. 2021-22-ம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ. 20 கோடி நன்கொடையுடன் முதல் 10 நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்த ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.

2020-21-ல், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, தேர்தல் அறக்கட்டளையின் மூல்ம் நன்கொடை வழங்கிய முதல் எட்டு நன்கொடையாளர்கள் அனைவரும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளனர். ஒன்பதாவது மற்றும் பத்தாவது பெரிய நன்கொடையாளர்களான லக்ஷ்மி மெஷின் ஒர்க் லிமிடெட் மற்றும் அவினாஷ் போசலே குழுமங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை. தேர்தல் அறக்கட்டளைகளுக்கான 2019-2020-ம் ஆண்டின் முதல் 10 நன்கொடையாளர்களில், இந்தியா புல்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம், டெல்லி சர்வதேச விமான நிலையம் நிறுவனம், எம்.ஐ.ஜி பாந்த்ரா ரியல்டார்ஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனம் மற்றும் அபில் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் ஆகியவை தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.

2018 - 2019-ம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகளின் முதன்மை நன்கொடையாளர்கள், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம், ஜி.எம்.ஆர் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ், ஜி.எம்.ஆர் ஹைதராபாத் ஏர் கார்கோ அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவவை தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.

2017 - 18-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சிகளுக்கு அநாமதேய நன்கொடைகளை வழங்க அனுமதித்தது. இந்தத் திட்டம் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகக் கண்டறிந்து பிப்ரவரி 15-ல் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்களின் நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகளின் அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment