அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடா செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட ஜூன் 30ஆம் தேதி வரை, நீட்டிக்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது, மேலும் மார்ச் 12-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வணிக நேரம் முடிவதற்குள் விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
மேலும் எஸ்பிஐ வழங்கிய விவரங்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“எஸ்பிஐ தனது மனுவில், கோரப்பட்ட தகவல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன என்பதைக் குறிக்கிறது. எனவே, ஜூன் 30 வரை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்பிஐயின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார்.
எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “நாங்கள் தகவல்களை தொகுக்க முயற்சிக்கிறோம், முழு செயல்முறையையும் மாற்றியமைக்க வேண்டும். நாங்கள் ஒரு வங்கியாக இது ஒரு ரகசியமாக இருக்க வேண்டும்”, என்று வாதாடினார்.
ஆனால், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சீல் செய்யப்பட்ட கவரைத் திறந்து, விவரங்களைத் தொகுத்து, தகவல்களைத் தர வேண்டும். சீலிடப்பட்ட உறையில் விவரங்களை, தாக்கல் செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கேட்டுக் கொண்டார்.
தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. “கடந்த 26 நாட்களில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்கள் மனுவில் அந்த விவரங்கள் ஏதும் இல்லை” என்று அமர்வு குறிப்பிட்டது.
பிப்ரவரி 15 அன்று, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு அரசியல் நிதியுதவியை அனுமதித்த மையத்தின் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை "அரசியலமைப்புக்கு விரோதமானது" என்று கூறி ரத்து செய்தது.
நன்கொடையாளர்களின் விவரங்களையும் அவர்கள் நன்கொடையாக வழங்கிய தொகை மற்றும் பெறுநர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு, எஸ்பிஐயிடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த உத்தரவைப் படிக்கும் போது, தலைமை நீதிபதி, “தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் 7(4)வது பிரிவு, தேர்தல் பத்திரத்தை வாங்குபவர் அளிக்கும் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியால் ரகசியமாக கருதப்படும் என்றும், அவ்வாறு செய்ய அழைப்பு விடுக்கப்படும் போது அல்லது சட்ட அமலாக்கத்தால் குற்றத்தை பதிவு செய்யும் போது வெளியிடப்படும் என்றும் கூறுகிறது.
எனவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின்படி, எஸ்பிஐ தேவைப்படும் போது தகவல்களை வெளியிட வேண்டும்.
Read in English: Electoral bonds: Supreme Court dismisses SBI plea to extend deadline, asks to furnish details by tomorrow
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“