மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்டுகள்... துணை நிற்கிறார்களா சமூக செயல்பாட்டாளர்கள்?

புனே, டெல்லி, மும்பை, கோவா, ராஞ்சி , ஹைதராபாத் என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் புனே காவல் துறையினர்...

பீமா கோரேகான் வன்முறை :

மகாராஷ்ட்ரா மாநிலம் பீமா கோரேகான் பகுதி அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒரு இடமாகும். காரணம் அப்பகுதியின் பின்னால் இருக்கும் வரலாறு. இரு நூறு வருடங்களுக்கு முன்பு, 1817ல் பேஷ்வா ராணுவத்திற்கு எதிராக, ஆங்கிலப் படையில் இணைந்து மஹர் என்ற தலித் மக்கள் போர் புரிந்தனர். அப்போரில் இறந்து போன மஹர் இன மக்களுக்காக 1927ம் ஆண்டு அம்பேத்கர் அஞ்சலி செலுத்தினர்.

பேஷ்வா ராணுவத்திற்கு எதிராக போராடிய நாளை நினைவு கூறும் வகையில் 2வது நூற்றாண்டு விழா கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த விழாவில் பெரிய கலவரம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மற்றும் பொதுச்சொத்துகள் பலத்த சேதாரமாகின.

இதனை விசாரித்த புனே காவல் துறையினர், நினைவு விழா பேரணிக்கு முன்பாக எல்கர் பரிஷாத்  நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜிக்னேஷ் மேவானி, ரோஹித் வெமுலாவின் தாய், மற்றும் ஜெ.என்.யூ மாணவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

To read this article in English

பேரணியில் ஏற்பட்ட கலவரத்துக்கு இந்த நிகழ்ச்சியில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. புனே காவல்துறையினர், நகரில் இருக்கும் முக்கியமான சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர்களின் குடியிருப்புப் பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிலரை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவர்களுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் காவல் துறையினர்.

பீமா கோரேகான் வன்முறையில் கைதாகும் சமூக செயற்பாட்டாளர்கள்

புனே காவல்துறையினர் இந்த நடவடிக்கையினை டெல்லி, கோவா, ஹைதராபாத், ராஞ்சி, மற்றும் மும்பை பகுதியிலும் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை செயற்பாட்டாளார் மற்றும் ஊடகவியலாளரான கௌதம் நவலகா, ஹைதராபாத்தினை சேர்ந்த எழுத்தாளார் வரவரா ராவ், மும்பையைச் சேர்ந்த வெர்னோன் மற்றும் அருண், டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் ஆகியோர் வீடுகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் ஏற்கனவே ஐந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு வழக்குரைஞரை கது செய்து விசாரணை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 6ம் தேதி சுதிர் தவாலே, மும்பையைச் சேர்ந்த ஜதி அண்டச்சி சால்வல், ரோணா வில்சன், சுரேந்திர காட்லிங், நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷோமா சென், மற்றும் ஊர்புற மேம்பாட்டுத் துறையில் வேலை பார்த்த மகேஷ் ராவத் ஆகியோரை கைது செய்து நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்ட மாவோயிஸ்ட் இயக்கதினர் ஒருவரின் இல்லத்தில் இருந்து கைப்பற்ற ஆவணங்களையும் அவரிடம் சமர்பித்தார்கள் காவல்துறையினர். கைது செய்யப்பட்ட ஐவரும் புனேவில் இருக்கும் யேர்வாடா மத்திய சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டுருப்பவர்களுடன் கூட்டாக செயல்பட்டார்கள் என்று அனைவரையும் காவலில் வைத்திருக்கிறது புனே காவல்துறை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close