ஜனவரி, 2002 குஜராத் கலவரத்தின் போது மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பி.பி.சி ஆவணப்படத்தை தடுக்க இந்திய அரசு உத்தரவிட்டது. சமூக ஊடகங்கள் வழியாக வீடியோக்களை பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் ஆவணப்படம் தொடர்பான உள்ளடக்கத்தை ட்விட்டர் நீக்கியபோது, “சரியாக என்ன நடந்தது” என்று தனக்குத் தெரியாது என்று எலான் மஸ்க் புதன்கிழமை கூறினார். மேலும், சமூக ஊடக உள்ளடக்கம் தொடர்பான சில விதிகள் இந்தியாவில் மிகவும் கடுமையானவையாக இருக்கிறது என்றும் கூறினார்.
ஜனவரி, 2002 குஜராத் கலவரத்தின் போது மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பி.பி.சி ஆவணப்படத்தை தடுக்க இந்திய அரசு உத்தரவிட்டது. சமூக ஊடகங்கள் வழியாக வீடியோக்களை பகிர்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்த ஆவணப்படத்தின் வீடியோவை இணைக்கும் 50க்கும் மேற்பட்ட ட்வீட்களை முடக்குமாறு ட்விட்டருக்கு இந்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அரசாங்கத்தின் ஆலோசகர் கஞ்ஜன் குப்தா தெரிவித்துள்ளார்.
பி.பி.சி இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பவில்லை என்றாலும், அந்த வீடியோ சில யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கஞ்ஜன் குப்தா கூறினார்.
இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் தளத்தில் சில உள்ளடக்கத்தை ட்விட்டர் எடுத்ததா என்று கேட்டபோது, எலான் மஸ்க், “இந்த குறிப்பிட்ட சூழ்நிலை எனக்கு தெரியாது… இந்தியாவில் சில உள்ளடக்க சூழ்நிலையில் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை” என்று ட்விட்டர் ஸ்பேஸ்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“சமூக ஊடகங்களில் இடம் பெறும் உள்ளடக்கம் தொடர்பாக இந்தியாவில் உள்ள விதிகள் மிகவும் கடுமையானவை. நாட்டின் சட்டங்களைத் தாண்டி செல்ல முடியாது” என்று எலான் மஸ்க் கூறினார்.
2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது 1,000 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இந்த கலவரத்தின் போது இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் முதல்வராக மோடி தலைமை வகித்ததை இந்த ஆவணப்படம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
“எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு சிறைக்குச் செல்வது அல்லது நாங்கள் சட்டங்களுக்கு இணங்குவது இதில் விருப்பம் என்றால், நாங்கள் சட்டங்களுக்கு இணங்குவோம்…” என்று எலான் மஸ்க் கூறினார்.
இந்தியாவின் ஒழுங்குமுறை ஆய்வு பல்வேறு யு.எஸ். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், மற்றும் அமேசான்.காம் நிறுவனம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையில் வணிகச் சூழலைப் பாதித்துள்ளன. சில நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகின்றன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர சீக்கிய அரசை ஆதரிக்கும் கணக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் போன்ற உள்ளடக்கங்களை நீக்குமாறு இந்திய அதிகாரிகள் கடந்த காலங்களில் ட்விட்டரைக் கேட்டுக் கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“