Advertisment

எமெர்ஜென்ஸி முதல் அயோத்தி வரை... 1971 போர் முதல் நியூக்ளியர் ஒப்பந்தம் வரை... இந்தியாவின் பிரதமர்கள்

ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில், அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
எமெர்ஜென்ஸி முதல் அயோத்தி வரை... 1971 போர் முதல் நியூக்ளியர் ஒப்பந்தம் வரை... இந்தியாவின் பிரதமர்கள்

ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisment

“டிசம்பர் 6, 1992 அன்று காலை, அயோத்தியில் ராமர் பிறந்த இடமான சர்ச்சைக்குரிய இடத்திற்கு செயற்பாட்டாளர்கள் திடீரென நுழைந்து கைவிடப்பட்ட கட்டிடத்தை அழித்தார்கள். அன்று இரவு பி.வி. நரசிம்ம ராவ் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்” என்று வியாழக்கிழமை திறக்கப்பட்ட பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நரசிம்ம ராவ் எதிர்கொண்ட சவால்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்பாகும் ஒரு வீடியோ கிளிப் கூறுகிறது.

‘கர சேவகர்கள்’ என்ற வார்த்தை ‘செயல்பாட்டாளர்கள்’ என்று மாற்றப்பட்டுள்ளது மற்றும் ‘சவால்’ என்பது இரண்டு வரிகளில் கலைக்கப்பட்டது என்று அந்த வீடியொ கிளிப் தொடர்கிறது: “இந்த சர்ச்சை இறுதியாக நவம்பர் 9, 2019 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒருமித்த தீர்ப்பால் தீர்க்கப்பட்டது. அனைத்து வழக்கறிஞர்களும் தீர்ப்பை மதித்தார்கள். சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் ராமஜென்மபூமி நியாஸ் உரிமை கோருவதை இந்த தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.

அந்த ஒரு காட்சியைத் தவிர, புதுடெல்லியில் உள்ள தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம், லால் பகதூர் சாஸ்திரி முதல் மன்மோகன் சிங் வரை அனைத்துப் பிரதமர்களின் வரலாற்று முயற்சிகளையும் சாதனைகளையும் மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுவதோடு, அவர்களின் பதவிக்காலத்தில் நாட்டின் வரலாற்றில் மைல்கல் நிகழ்வுகளையும் திருப்புமுனைகளையும் குறிக்கிறது.

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. பொக்ரான் அணுகுண்டு சோதனைகளுக்காக ஒரு சிறப்பு பக்கமும் அவரது வரலாற்று சிறப்புமிக்க லாகூர் வருகைக்காக ஒரு சிறப்பு பக்கமும் மிகப் பெரிய வாசகம் அவர் குறித்து இருக்கிறது. கார்கில் போர், ஜம்மு & காஷ்மீர் அமைதி முயற்சிகள், மூன்று புதிய மாநிலங்களின் உருவாக்கம், ஜி.டி.பி உயர்வு, முதலீட்டு விலக்கு, சர்வ சிக்ஷா அபியான் மற்றும் தங்க நாற்கர சாலை நெட்வொர்க் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

மறுபுறம், இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி மற்றும் அக்காலகட்டத்தில் செய்த அத்துமீறல்களைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் சித்தரிப்பு உள்ளது. சரியாகச் சொல்வதானால், வங்கதேசம் உருவாவதற்கு வழிவகுத்த 1971 போரில் அவரது தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்காக ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.

publive-image

ராஜீவ் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பிரிவில் அதிகம் பிரபலம் இல்லாத ஷா பானோ வழக்கு, போபால் விஷவாயு துயரம் மற்றும் போஃபர்ஸ் ஊழல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் கணினி புரட்சி, மிசோ அமைதி ஒப்பந்தம், அஸ்ஸாம் ஒப்பந்தம், பஞ்சாப் ஒப்பந்தம் மற்றும் கங்கா செயல் திட்டம் உள்ளிட்ட அவரது சாதனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷா பானோவின் புகைப்படத்துடன், அந்த வழக்கை ஒரு வீடியோ கிளிப் விவரிக்கிறது: “ஒரு அரசியல் முடிவு ராஜீவ் காந்தியின் புகழ் பிம்பத்தின் மீது அழியாத கறையாக படிந்தது… தேர்தல் விளைவுகளைப் பற்றிய பயத்தால் தூண்டப்பட்ட ராஜீவ் காந்தி, காங்கிரசுக்குள் இருக்கும் முஸ்லிம் கடும்போக்காளர்களிடம் சமர்ப்பித்தார். 1986-ன் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் தவறாகப் பெயரிடப்பட்டது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடித்தது மற்றும் ஷா பானோவின் அற்பமான வாழ்வாதாரத்தை மறுத்தது.

publive-image

லால் பகதூர் சாஸ்திரி முதல் மன்மோகன் சிங் வரை அனைத்து பிரதமர்களின் வரலாற்று முயற்சிகள் மற்றும் சாதனைகளை புதுதில்லியில் உள்ள தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அருங்காட்சியகம் தீன் மூர்த்தி பவன் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது மாறாமல் உள்ளது, ஆனால் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை இன்று இருக்கும் உயரத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளது என்றார்.

குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள் தற்காலத்திலும் பொருத்தப்பாடு உள்ளதாககக் காணப்படுகிறது. உதாரணமாக, லால்பகதூர் சாஸ்திரியின் பகுதியில், ஒரு பக்கத்தில் அவர் பசுமைப் புரட்சிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1965ல் பொருளாதார நிலை மேம்பட்டதாக ஒரு காட்சி கூறுகிறது. ஆனால், மொழிப் போராட்டத்தின் மற்றொரு பிரிவு, “ஜனவரி 1965ல் இந்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களில் ஹிந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சுற்றறிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் அண்ணாதுரை கவலை தெரிவித்தார். உறங்கிக்கொண்டிருந்த இந்த அச்சம் ஒரு மொழி கிளர்ச்சியாக வெடித்தது. 1966-ன் தாஷ்கண்ட் ஒப்பந்தம் மற்றும் அவரது ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான் முழக்கம்’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

publive-image

இந்திரா காந்தியின் தனியுரிமையை ஒழித்தல், வங்கிகளை தேசியமயமாக்குதல், நாதுலா போர், பொக்ரான் I அணுகுண்டு சோதனை மற்றும் 1969-ம் ஆண்டு காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன. அவசரநிலை ஒரு விரிவான சித்தரிப்பை பெற்றுள்ளது. உதாரணமாக, உள்ளே ஒரு திரையுடன் ஒரு சிறை உள்ளது. மேலும் இந்த குறும்பட வீடியோவில் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும், அவர்களில் சிலர் எதிர்கொண்ட துன்பங்களும் இடம்பெற்றுள்ளன.

பழைய தொலைக்காட்சி மற்றும் வானொலி பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை அவசரநிலையின் போது விதிக்கப்பட்ட பத்திரிகை தணிக்கையை பார்வையாளர்களுக்கு தெரிவிக்கின்றன. ஒரு சிறிய செய்தித்தாள் கிளிப்பிங்கில் ‘மகனும் வருகிறார்’ என்ற தலைப்பு உள்ளது. சுவரில் சஞ்சய் காந்தியின் புகைப்படத்தில் ‘கூடுதல் அரசியலமைப்பு அதிகாரம்’ என்ற தலைப்பு உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயணனின் பயோ டேட்டாவுடன் புகைப்படமும், சிறையில் இருந்து அவர் எழுதிய பல கடிதங்களும் தனித்து நிற்கின்றன.

publive-image

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இந்த அருங்காட்சியகம் வழிநடத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் அழகான தோற்றத்தைப் பெறுகிறார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு உரிம முறை மற்றும் படிப்படியான தனியார்மயமாக்கல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார சீர்திருத்தம், உண்மையான நிர்வாக அதிகாரங்களை விரிவுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் தீவிர மறுசீரமைப்பு ஆகியவற்றின் மூலம் ஐந்து முக்கிய முடிவுகளை அவர் கட்டமைத்த நிர்வாகத்தை ஒரு வீடியோ காட்சி காட்டுகிறது. நிர்வாக பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு, ஒரு தீவிர நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்டமன்றங்களில் கட்சி விலகுவதை தடை செய்தல் மற்றும் வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆக குறைத்தல் போன்ற அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

நரசிம்மராவ் குறித்து அவருடைய அரசாங்கம் துவக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்களை நிறைவேற்றியது, இந்திய தொலைக்காட்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்தது மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் விரைவாக முன்னேறியது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பங்குச் சந்தை ஊழல் மற்றும் ஜே.எம்.எம் லஞ்ச வழக்கு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹர்ஷத் மேத்தா ஊழல் பற்றிய விவரங்களைக் கொடுத்து, ‘இந்த சர்ச்சை ராவ் அரசாங்கத்தின் மீது ஒரு கறையாக மாறியது’ என்று முடிக்கிறது. அயோத்தியைத் தவிர, 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு அவர் எதிர்கொண்ட சவாலாக ஒரு காட்சி பட்டியலிடுகிறது.

வி பி சிங் மற்றும் மண்டல் கமிஷன் முக்கியக் குறிப்பைக் காண்கிறது. மேலும், பிரசார் பாரதி மசோதா மற்றும் அவரது அரசாங்கத்தால் தேசிய மகளிர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்தியாவின் மூன்று தசாப்தகால அணுசக்தி நிறவெறி மற்றும் சிங்கின் கீழ் இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை ஒரு பெரிய திரை தெரிவிக்கிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில், விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் ராணுவ முன்னேற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் ஆதார் முன்முயற்சி, யுஐடிஏஐ அமைப்பது மற்றும் சிங்கின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் கொள்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது. குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது அவரது அரசாங்கத்தின் உரிமை சார்ந்த முன்முயற்சிகளை குறிப்பிடாமல் குடிமக்கள் நலத் திட்டங்களை அது குறிப்பிடுகிறது. வாஜ்பாய் காலத்தில் இருந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கிய பொடா சட்டம் ரத்து பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.கே. குஜ்ராலின் குஜ்ரால் கோட்பாடு, எச்.டி. தேவகவுடாவின் ஜம்மு காஷ்மீர் பயணம், மொரார்ஜி தேசாய் ஷா கமிஷன் அமைத்தல், லோக்பால் மசோதா அறிமுகம் மற்றும் 44வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Pm Modi New Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment