Advertisment

UGC சிறப்பு அங்கீகாரம் : முக்கிய தகுதி வரம்பை எட்டாத வேலூர் VIT...

நவம்பர் 17, 2017ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த தகுதியை குறைக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வி.ஐ.டி., கே.ஐ.ஐ.டி சிறப்பு அங்கீகார விவகாரம் :  யுஜிசியிடம் மத்திய அரசு கேள்வி

Ritika Chopra

Advertisment

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மத்திய அரசு, IoE எனப்படும் சிறப்பு அங்கீகாரங்களை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு. அந்த பட்டியலில் ஒடிசாவின் கலிங்கா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி மற்றும் வேலூரின் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றிருந்தது. ஸ்பான்சரிங் ஆர்கனிசேசன் உறுப்பினர்களின் மொத்த நெட் வொர்த்திற்கு மத்திய அரசு விதித்த குறிப்பிட்ட தகுதி அளவை இந்நிறுவனங்கள் எட்டவில்லை என்பதால் இந்த பட்டியலில் இந்த நிறுவனங்கள் இடம் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்கள் கம்பனீஸ் ஆக்ட், 2013 ( Companies Act, 2013) கீழ், தொண்டு நிறுவனம், இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனம் அல்லது பொதுமக்கள் அறக்கட்டளையில் இயங்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியம் அறிவித்திருந்தது.  ஏற்கனவே இருக்கும் ஸ்பான்சர் நிறுவனங்களின் உறுப்பினர்களின் நெட்வொர்த் மதிப்பானது ரூ. 3000 கோடியாகவும், புதிதாக வர இருக்கும் ஸ்பான்சரிங் நிறுவனங்களின் உறுப்பினர்களின் நெட்வொர்த் மதிப்பானது ரூ. 5000 கோடியாக இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

To read this article in English

வி.ஐ.டி மற்றும் கே.ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், சிறப்பு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் போது, தங்களின் நிலம், கட்டிடங்கள் ஆகியவற்றின் மதிப்பினையும் நெட்வொர்த்தாக அறிவித்திருக்கிறது.

கே.ஐ.ஐ.டியின் ஸ்பான்சரிங் ஆர்கனைசேசன் உறுப்பினர்கள் 4 நபர்களின் நெட்வொர்த்தாக ரூ. 10 ஆயிரம் கோடியை குறிப்பிட்டிருந்தது. இந்த கே.ஐ.ஐ.டி சமூகம் லாப நோக்கற்றதாக திகழ்கிறது. ஒரு அமைப்பு பல்கலைக்கழகமாக இயங்க, கே.ஐ.ஐ.டி சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் நிகர மதிப்பினையும் நிதியாக அளிப்பதில்லை என்று கூறி அந்த நான்கு நபர்களின் நெட்வொர்த் மதிப்பானது ரூ. 10 ஆயிரம் கோடி என்றும் அந்நிறுவனம் அதில் அறிவித்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

அந்த விண்ணப்ப படிவத்தில், கே.ஐ.ஐ.டி சொசைட்டியின் பண மதிப்பு, வங்கிக் கணக்கில் இருக்கும் நிதி, ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணம், கடன் மற்றும் முன்பணம், நிலம் மற்றும் கட்டிடம் ஆகியவற்றின் சொத்து மதிப்புகளை பட்டியலிட்டுள்ளது.

வி.ஐ.டி நிறுவனம்

வி.ஐ.டி. நிறுவனம் தங்களுடைய கரண்ட் மார்க்கெட் வேல்யூவினை பட்டியலில் செய்துள்ளது. வி.ஐ.டி. கேம்பஸில் இருக்கும் நிலம் மற்றும் கட்டிடங்களின் மதிப்பு, சென்னை வளாகத்தின் கட்டிட மதிப்புகள் ஆகியவற்றை சொத்து மதிப்பாக பட்டியலிட்டுள்ளது அந்நிறுவனம்.

ஓ.பி.ஜிந்தால் க்ளோபல் யுனிவர்சிட்டி

ஓ.பி. ஜிந்தால் க்ளோபல் யுனிவர்சிட்டியும் சிறப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த தகுதியை பூர்த்தி செய்ய விண்ணப்ப படிவத்தில் நவீன் ஜிந்தாலின் நெட்வொர்த்ஹ்டாக ரூ. 3,392 கோடியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓம் பிரகாஷ் ஜிந்தால் கிராம் ஜன் கல்யான் சன்ஸ்தனின் (Om Prakash Jindal Gramin Jan Kalyan Sansthan) ஏழு உறுப்பினர்களில் நவீன் ஜிந்தாலும் ஒருவர். இது தான் இந்த கல்வி நிறுவனத்தின் ஸ்பான்சராக செயல்படுகிறது.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்

ஷிவ் நாடார் பல்கலைக்கழகமும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. தொழிலதிபரான ஷிவ் நாடாரின் நெட்வொர்த் ரூ. 32,938 கோடியை விண்ணப்பத்தில் அறிவித்து இந்த தகுதியை பெற்றுள்ளது இப்பல்கலைக்கழகம்.  அவருடைய மனைவி கிரன் நாடாரின் சொத்து மதிப்பு Rs 18,922.43 கோடி என்பதையும், அவருடைய மகள் மற்றும் எச்.சி.எல் என்டெர்பிரைஸின் சி.இ.ஒ ரோஷிணி நாடார் மல்ஹோத்ராவின் நெட்வொர்த்தாக ரூ. 5,972.39 கோடியையும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஷிவ் நாடார் பல்கலைகழகத்தை நடத்தும் ஷிவ் நாடார் பவுண்டேசனின் உறுப்பினர்களாக இம்மூவர்களும் செயல்படுகின்றனர்.

இது தொடர்பாக, ஒரு வாரத்திற்கு முன்பே, உயர்க்கல்வி செயலாளர் அமித் காரே, பல்கலைக்கழக மானியக்குழு சேர்மன் டி.பி. சிங், வி.ஐ.டி, கே.ஐ.ஐ.டி நிறுவனங்களின் ரெஜிஸ்ட்ரார் மற்றும் துணை வேந்தர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் ஏதும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

அதிருப்தியில் பல்கலைக்கழகங்கள்

மேலே கூறப்பட்ட தகுதிகள் காரணமாக இந்த சிறப்பு அங்கீகாரத்திற்கு பலரும் விண்ணப்பங்கள் அனுப்புவதையே நிறுத்திவிட்டனர். IoE திட்டத்திற்காக “தனியார் துறையின் கீழ் சாத்தியமான விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதற்காக” அக்டோபர் 27, 2017 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு வொர்க்‌ஷாப்பிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.  ஸ்பான்சரிங் மெம்பர்களின் நெட் வொர்த்தின் தகுதி ரூ. 3000-ஐக் குறைக்க பல்கலைக்கழகங்கள் வேண்டிக் கொண்ட போதும், நவம்பர் 17, 2017ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்த தகுதியை குறைக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

2019ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24ம் தேதி, நொய்டாவில் சிம்பியோசிஸ் இன்டெர்நேசனல் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற வித்யா யெரவ்தேக்கர், மத்திய மனித வள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் முன்பு, இந்த தகுதியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் கல்வியாளளர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் மதிப்பு ரூ. 3000 கோடியை எட்டாது என்றும் அவர் கூறினார். “ஐயா, தயவுசெய்து நல்ல கல்வி நிறுவனங்களையும் கருத்தில் கொள்ளுங்கள், அதன் உறுப்பினர்கள் அவ்வளவு மதிப்புடையவர்கள் அல்ல, ஆனால் அறக்கட்டளைக்கு அவ்வளவு மதிப்பு இருக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் தொடக்க விழாவில் கூறினார்.

க்யூ.எஸ். இந்தியா ரேங்கிங்கில் சிம்பியோசிஸ் 23வது இடத்திலும், வி.ஐ.டி 44வது இடத்திலும். கே.ஐ.ஐ.டி 61-65க்கான இடங்களிலும் இருந்தது. ஆனால் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (National Institute Ranking Framework (NIRF)) சிம்பியோசிஸ் 82வது இடத்திலும், வி.ஐ.டி மற்றும் கே.ஐ.ஐ.டி முறையே 32 மற்றும் 50 இடங்களைப் பிடித்தது. க்யூஎஸ் மற்றும் என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைகளின் அடிப்படையில் தான் 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க முடிவெடுத்தது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

NDA-II அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி அலுவலகத்தின் திட்டமான IoE திட்டம், 10 பொது மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களை உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களாக மாற்றக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சிறப்பு அங்கீகாரம் பெறும் கல்வி நிறுவனங்கள் சுயமாக செயல்படும் பண்பினை பெறும். அளிக்கப்படும் கல்விக்கான கட்டணங்கள், ஒரு பாடத்திட்டத்தின் காலம் மற்றும் அதன் அமைப்பு ஆகியவற்றை அந்த கல்வி நிறுவனமே மேற்கொள்ள முடியும். 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்து அந்நிறுவனங்களுக்கு ரூ. 1000 கோடியை நிதி உதவியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை மாதம் சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியுடைய 6 நிறுவனங்களை மத்திய அரசு அறிவித்தது. (3 தனியார் நிறுவனங்கள், 3 அரசு நிறுவனங்கள்). மீதம் இருக்கும் 14 நிறுவனங்களின் பட்டியலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது மத்திய அரசு. அதில் வி.ஐ.டி., கே.ஐ.ஐ.டி, அம்ரிதா விஷ்வா வித்யபீதம், ஜாமியா ஹாம்தர்த் (புது டெல்லி), ஓ.பி. ஜிந்தால் பல்கலைக்கழகம் (ஹரியானா), ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், சத்ய பாரதி ஃபவுண்டேசன் ஆகிய கல்வி நிறுவனங்களின் பெயர் தனியார் கல்வி நிறுவனங்களின் பரிந்துரையில் இடம் பெற்றிருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Vellore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment