துபாய் நாட்டு விமான சேவையான எமிரேட்ஸ் ஏர்லைன் தன்னுடைய உணவுப் பட்டியலில் இருந்து 'இந்து உணவு’ என்ற ஆப்சனை நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் இந்து மக்கள் தங்களுக்கு பிடித்தமான சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் ஜெய்ன் சைவ உணவுகள், இந்திய சைவ உணவுகள், கோஷர் உணவுகள், மற்றும் மாட்டிறைச்சியற்ற அசைவ உணவுகள் இடம் பெற்றிருக்கிறது.
தங்களுடைய வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பொறுத்தே இந்த முடிவினை எடுத்துள்ளதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஃபீட் பேக் மற்றும் யோசனைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது எமிரேட்ஸ் நிறுவனம். உள்ளூர் சமையல், சுவை, மற்றும் அதில் மக்கள் காட்டும் ஆர்வத்தினை தொடர்ந்தே இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் தேவைகள் பொறுத்தே அவர்களுக்கு உணவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது எமிரேட்ஸ் விமான சேவை.