Advertisment

ஊழியர்களுக்கு ரூ2500 கோடி இ.பி.எஃப் தொகை பங்களிப்பு: நிர்மலா சீதாராமன்

அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையை (பி.எஃப்) மத்திய அரசே செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sitharaman announcement, next 3 months epfo govt will pay, nirmala sitharaman today, epfo announcement, அடுத்த 3 மாதங்களுக்கு இபிஎஃப் மத்திய அரசே செலுத்தும், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு இபிஎஃப் செலுத்த ரூ.2500 கோடி ஒதுக்கீடு, laksh employees will benefit, rs2500 crore allotted to epfo, nirmala sitharaman press conference latest news, 20 lakh crore package, nirmala sitharaman press conference today time, nsitharaman, nirmala sitharaman cast, sitharaman speech, nirmala sitharaman speech, nirmala sitharaman conference

economic relief fund announcement live

அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையை (பி.எஃப்) மத்திய அரசே செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Advertisment

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவு இந்தியா திட்டங்களை அறிவித்தார்.

மத்திய நிதியமைசர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையை (இ.பி.எஃப்) மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்தார்.

கொரோனா பொது முடக்கத்தின் தொடக்கத்தில், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு இ.பி.எஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீண்டும் அடுத்த 3 மாதங்களுக்குமான பி.எஃப். தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளார். இதனால், 72 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கா அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கியுள்ளது என்ரு நிர்மலா சீதாராமன் கூறினார்.

வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும் என்றும், ஏற்கனவே 3 மாதங்களுக்கு பிஎஃப் சந்தாவை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த காலாண்டில் தொழிலாளர்களும் நிறுவனங்களும் பி.எஃப். தொகையை 10% செலுத்தினால் போதும் என்றும் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் ஊதியத்தில் 12 சதவீதம் என்பது பி.எஃப் தொகையாக இருக்கும் பட்சத்தில், அடுத்த காலாண்டில் 10 சதவீத பி.எஃப் தொகையை செலுத்தும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் கையில் சிறிதளவு பணம் மிச்சமிருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், பிரதமரின் கர்ப் கல்யான் திட்டம் விரிவாக்கத்தின் கீழ் ஊதியத்தில் 24% இ.பி.எஃப் தொகை செலுத்தற்கு தகுதி பெறாதவர்களுக்கு பொருந்தும்.

இந்த நிவாரணம் 6.5 லட்சம் நிறுவனங்களில் பணிபுரியும் 4.3 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். இது இந்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் கையில் ரூ.6,750 கோடி சில்லரையாக அளிக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment