இங்கிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் முன்கூட்டியே தேர்தலை சந்திப்பதாக அறிவித்தார். அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (ஜூலை 4 ஆம் தேதி) நடைபெற்றது. தேர்தல் முடிந்த உடனேயே வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சரிவைச் சந்தித்தது. தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
காலை 9:50 மணி நிலவரப்படி, கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 381 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 92 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் இதுவரை 562 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு உரையில், "மாற்றம் இப்போது தொடங்குகிறது. 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முடிவு கட்டப்பட்டது" என்று கூறினார்.
இதற்கிடையில், இங்கிலாந்து தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக், இந்த முடிவுகளை "சிந்தனையான தீர்ப்பு" என்று விவரித்தார். சுயபரிசோதனை மற்றும் முடிவுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ரிஷி சுனக் வலியுறுத்தினார். "இன்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நல்லெண்ணத்துடன், அதிகாரம் சுமூகமாகவும் அமைதியாகவும் மாறும்," என்று ரிஷி சுனக் கூறினார்.
மேலும், “தேர்தல் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் பிரிட்டிஷ் மக்கள் தெரிவித்த குறிப்பிடத்தக்க செய்தியைப் புரிந்துகொள்கிறேன். உள்வாங்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது,” என்றும் ரிஷி சுனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“