புனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

Prakash Javadekar defends cutting of trees for PM's rally: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மரங்கள் வெட்டுவதை புதன்கிழமை ஆதரித்து...

Prakash Javadekar defends cutting of trees for PM’s rally: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்காக மரங்கள் வெட்டுவதை புதன்கிழமை ஆதரித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது போல நிகழ்வுகள் இதற்கு முன்பும் செய்யப்பட்டுள்ளது, ஆனால், அதிக அளவில் நடப்பட்டன என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள சர் பரசுராம் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் கூட்டத்துக்காக சில மரங்கள் வெட்டப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய பின்னர், ஒரு நாள் கழித்து, பிரகாஷ் ஜவடேகரின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கூட்டம் அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. “ஒவ்வொரு முறையும் நாம் மரங்களை வெட்டும்போதும் அதிக அளவில் மரங்களை நடுகிறோம். இது வனத்துறையின் ஒரு விதி.” என்று பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“மோடியின் கூட்டத்துக்கு மரங்களை வெட்டுவது பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள்? மற்றவர்களின் கூட்டங்களுக்கும் முந்தைய பிரதமர்களின் கூட்டங்களுக்கும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முன்பு ஏன் இவர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள் பிரச்னை குறித்து பேசிய பிரகாஷ் ஜவடேகர், “நாங்கள் இந்த பிரச்னையை முந்தைய காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசாங்கத்திடமிருந்து பெற்றோம் என்று கூறினார். மேலும், “விவசாயிகளின் தற்கொலை 5 மாவட்டங்களில் மட்டுமே நடக்கிறது. ஏனென்றால், அங்கே நீர்ப்பாசன வசதிகள் இல்லை” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும் அவர், பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (பி.எம்.சி) தற்போதைய நெருக்கடிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டினார். பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நெருக்கடி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாவம்தான் என்று விமர்சித்தார். மேலும், ரூ.11,000 கோடிக்கு மேல் வைப்புத்தொகை வைத்திருக்கும் வங்கியில், ரூ.4,000 கோடிக்கு மேல் மோசடி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஒரு நிர்வாகியை நியமித்து வங்கியில் இருந்து பணம் எடுப்பதை ரூ.1,000 என வரையறுத்தது. திங்கள்கிழமை மாலை, பணம் எடுக்கும் தொகை ரூ .40,000 என உயர்த்தப்பட்டது. ரிசர்வ் வங்கி 77 சதவீத வைப்புத்தொகை வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று கூறியுள்ளது.

பிரகாஷ் ஜவடேகர், இந்து சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை வரவேற்றார். மகாராஷ்டிர மாநில பாஜக, செவ்வாய்க்கிழமை இந்தியாவின் உயர்ந்த குடிமகனுக்கு அளிக்கப்படும் கௌரமான பாரத ரத்னா விருதை சாவர்க்கருக்கு வழங்க வேண்டும் என அக்டோபர் நடைபெற உள்ள தேர்தலுக்கான அதனுடைய தேர்தல் அறிக்கையில் கோரியுள்ளது.

“சாவர்க்கர் மற்றும் பூலே தம்பதியர்கள் (சமூக சீர்திருத்தவாதிகள் சாவித்ரிபாய் பூலே மற்றும் மகாத்மா பூலே) பாரத ரத்னா விருது மூலம் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close