சுற்றுச்சூழல் விதிகளில் மாற்றம்: அணுசக்தி கனிம சுரங்கங்களுக்கு மக்கள் ஆலோசனையிலிருந்து விலக்கு

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறை (டி.ஏ.இ) விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறை (டி.ஏ.இ) விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
mining 2

இந்த விலக்கு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறை (டி.ஏ.இ) விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், “தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் மூலோபாயக் கருத்தாய்வுகளின்” அடிப்படையில், அணுசக்தி, முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களின் சுரங்கத் திட்டங்களுக்கு இனிமேல் மக்கள் ஆலோசனையிலிருந்து விலக்கு அளிக்கும் என்று புதிய அலுவலக குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

இந்த விலக்கு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறை (டி.ஏ.இ) விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய திட்டங்கள் சம்பந்தப்பட்ட துறை நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்களால் ஒரு “விரிவான மதிப்பீட்டிற்கு” உட்படுத்தப்படும். மேலும், திட்டத்தின் அளவு எவ்வளவு இருந்தாலும், அவை மத்திய அளவில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், அணுசக்தி, முக்கிய மற்றும் மூலோபாயக் கருத்தாய்வுகளைக் கொண்ட திட்டங்களுக்கு மக்கள் ஆலோசனை வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (இ.ஐ.ஏ) அறிவிப்பு, 2006, மற்றும் அதன் திருத்தங்களில் உள்ள விதிகளின் அடிப்படையில் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisment
Advertisements

“மேற்கண்ட விவகாரம் இந்த அமைச்சகத்தால் ஆய்வு செய்யப்பட்டது. இதில், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் மூலோபாயக் கருத்தாய்வுகளைக் கருத்தில் கொண்டு, எம்.எம்.டி.ஆர் சட்டம், முதல் அட்டவணையின் பகுதி B-இல் அறிவிக்கப்பட்ட அணுசக்தி கனிமங்கள் மற்றும் பகுதி D-இல் அறிவிக்கப்பட்ட முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களுக்கும் மக்கள் ஆலோசனை வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்... மேலும், சம்பந்தப்பட்ட நிலப்பகுதியின் அளவைப் பொருட்படுத்தாமல், மத்திய அளவில் மதிப்பீடு செய்யப்படும்” என்று அலுவலக குறிப்பு தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (இ.ஐ.ஏ) அறிவிப்பானது, வளர்ச்சி மற்றும் தொழில்துறை திட்டங்களின் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சமூகங்கள் மீதான தாக்கங்களை ஆய்வு செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் ஒரு முக்கிய அரசாங்க ஒழுங்குமுறையாகும். இ.ஐ.ஏ அறிவிப்பின் கீழ், மக்கள் ஆலோசனை என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறையாகும். இது பாதிக்கப்பட்ட சமூகங்களின் கவலைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பொது விசாரணையை உள்ளடக்கியது. மேலும், திட்டத்தின் தாக்கங்களால் பாதிக்கப்படுபவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ பதில்களையும் கோருகிறது.

ஆகஸ்ட் 4-ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் அளித்த கோரிக்கையில், பாதுகாப்புத் துறையில் அரிய பூமிக் கனிமங்கள் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியது. இவை கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தல் சாதனங்கள் (ரேடார் மற்றும் சோனார் போன்றவை), தகவல் தொடர்பு மற்றும் காட்சி சாதனங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் டாங்கிகள் ஆகியவற்றில் பொருத்தும் அமைப்புகள், மற்றும் துல்லியமான வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது.

இந்தியாவில் அரிய பூமிக் கனிமங்களுக்கான வளங்கள் குறைவாக இருப்பதாகவும், உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விநியோகம் குவிந்திருப்பதால், இது “நாட்டிற்கு மிகப்பெரிய விநியோக அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உள்நாட்டுச் சுரங்கங்களிலிருந்து அரிய பூமிக் கனிமங்களின் நிலையான விநியோகம் தேவைப்படுகிறது” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது.

“அதன்படி, முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்கள் தொடர்பான சுரங்கத் திட்டங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லது பிற மூலோபாயக் கருத்தாய்வுகள் தொடர்பான திட்டங்களாகக் கருதப்படலாம். சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கு மக்கள் ஆலோசனை வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது” என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலுவலக குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையில், அணுசக்தி துறை (டி.ஏ.இ), ஆகஸ்ட் 29-ம் தேதி எழுதிய கடிதத்தில், கடற்கரை மணல் கனிமமான மோனாசைட்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தோரியம், மூன்றாம் கட்ட அணுசக்தி திட்டத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதாக வலியுறுத்தியது. மேலும், புதிய கடற்கரை மணல் கனிமங்கள் மற்றும் யுரேனிய வைப்புகளைச் செயல்படுத்துவதன் மூலம், இந்தக் கனிமங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் அது கூறியது. எனவே, மக்கள் ஆலோசனை வழங்குவதிலிருந்து விலக்கு கோரியது.

முக்கிய மற்றும் மூலோபாய கனிமத் திட்டங்களுக்கு விரைவான மதிப்பீடு மற்றும் ஒப்புதலை வழங்குவதற்காக இந்த ஆண்டு செய்யப்பட்ட மற்ற மாற்றங்களுக்கு இணையாக அமைச்சகத்தின் இந்த முடிவு அமைந்துள்ளது. சுரங்க அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், மத்திய அரசு ஏற்கனவே அதன் ஆன்லைன் அனுமதிச் சாளரமான ‘பரிவேஷ்’ போர்ட்டலில் முக்கிய கனிமங்களுக்காக ஒரு தனிப் பிரிவை வைத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், 2023-ம் ஆண்டின் வான் (சம்க்ஷான் எவம் சம்வர்தன்) விதிகளையும் அது திருத்தியது. இத்தகைய திட்டங்களுக்கான வன ஒப்புதல்களைச் செயல்படுத்த, முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களுக்கான வகையை உருவாக்குவதற்கான ஒரு பிரிவையும் அது சேர்த்தது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023, அணுசக்தி கனிமங்கள் மற்றும் முக்கிய மற்றும் மூலோபாய கனிமங்களின் பட்டியலை வழங்குகிறது. மத்திய அரசு அவற்றின் ஆய்வு மற்றும் சுரங்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த கனிமங்களைச் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்தது.

Environment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: