Advertisment

108 வயதான ”மரங்களின் அன்னை” சாலுமரத திம்மக்காவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Environmentalist Saalumarada Thimmakka awarded honorary doctorate by central university of Karnataka

Environmentalist Saalumarada Thimmakka : கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை நடவு செய்தவர் ராம்நகர் மாவட்டம் குளிகல் கிராமத்தை சேர்ந்த சாலுமரத திம்மக்கா. 108 வயதான இவர் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

Advertisment

குளிகல் குதூர் இடையேயான சாலையில் வரிசையாக ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்த்ததால் அவர் சாலுமரத திம்மக்கா என்று கன்னட மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் சாதனைகளை பாராட்டி கர்நாடக அரசு ஏற்கனவே கன்னட ராஜ்யோத்சவா, கன்னட ரத்னா உள்ளிட்ட விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது. இந்தியாவின் சிறந்த தேசிய குடிமகள் விருதினை ஏற்கனவே பெற்ற இவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

இவரின் விருதுகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது போன்று கௌரவ முனைவர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது கர்நாடகாவில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எம். மல்லேஷ்வரய்யா பெங்களூருவில் உள்ள திம்மக்காவின் வீட்டிற்கே வந்து முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவர் சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Karnataka Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment