Employees Provident Fund Balance Check @epfindia.gov.in: இபிஎஃப் அக்கவுண்டில் சேர்ந்திருக்கும் பணத்தை அறிவது சுலபமானது. வெப்சைட்டில் அறிவது, ஆப் மூலமாக அறிவது, எஸ்.எம்.எஸ். மூலமாக அறிவது என 3 வழிமுறைகள் இருக்கின்றன. அவை பற்றிய விவரத்தை இங்கு காணலாம்.
இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் ஊழியர்களிடம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக (இபிஎஃப்) பணம் பிடித்தம் செய்யும். அந்தத் தொகையுடன் நிறுவனமும் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்தை சேர்த்து இபிஎஃப் நிறுவனத்தில் செலுத்தும்.
EPF Balance Check
EPF Balance Check Number Toll Free: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
இந்தத் தொகையை பராமரிக்கும் பொறுப்புடன் உரிய வட்டியையும் சேர்த்து வழங்குகிறது இபிஎஃப் நிறுவனம். அந்தத் தொகையில் இருந்து அவசர காலத்திற்கு கடம் பெற முடியும். ஒருவேளை வேலையை விட நேர்ந்தால், இபிஎஃப்-ல் சேர்த்த தொகை பெரும் உதவியாக அமையும். அப்படி இல்லாவிட்டாலும், ஓய்வு காலத்தில் அந்தத் தொகை வாழ்வாதாரமாக இருக்கும்.
உங்கள் இபிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் மொத்த பணத்தை அறியும் முறையை இங்கு காணலாம். முதல் வழிமுறை இபிஎஃப் வெப்சைட் மூலமாக பார்ப்பதுதான். Employees' Provident Fund Organisation நிறுவனத்தில் அதிகாரபூர்வ வெப்சைட்டான epfindia.gov.in -ல் இதை பார்க்க வேண்டும்.
ஸ்டெப் 1: epfindia.gov.in வெப்சைட்டில் நுழைந்து e-passbook -ஐ க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: க்ளிக் செய்ததும், passbook.epfindia.gov.in என்கிற பக்கத்தில் நுழைவீர்கள்.
ஸ்டெப் 3: அங்கு உங்களது யூசர் நேம் (UAN or Universal Account Number) மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: அதன்பிறகு திறக்கும் பக்கத்தில் உங்களது மெம்பர் ஐ.டி.யை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: மெம்பர் ஐ.டி., நீங்கள் பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்கும். அதை தேர்வு செய்ததும் உங்களது இ-பாஸ்புக் தெரியும். அதில் உங்கள் அக்கவுண்டில் உள்ள பணத்தை அறியலாம்.
இதேபோல Umang (Unified Mobile Application for New-age Governance) app மூலமாகவும், 01122901406 என்கிற எண்ணுக்கு இபிஎஃப் அக்கவுண்டில் நீங்கள் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணில் இருந்து மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமாகவும் இபிஎஃப் இருப்புத் தொகையை சுலபமாக அறியலாம்.