உங்களின் பி.எஃப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்வது எப்படி ?

How to Check EPF Balance Online : தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மற்றும் பெங்காளி ஆகிய...

EPF Balance Enquiry : எம்ப்ளாயீஸ் ப்ரோவிடண்ட் ஃபண்ட் ஆர்கனிசேசன் எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி, எம்ப்ளாயி சார்பிலும், எம்ப்ளாயர் சார்பிலும் சிறிதளவு பங்களிப்பை சேமித்து வைப்பதாகும். How to Check EPF Balance through EPFO Portal என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

ஒரு நிறுவனம் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்தால் நிச்சயமாக பி.எஃப். திட்டம் அங்கு நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

ஒரு பணியாளர் கணக்கில் எவ்வளவு பி.எஃப் பணம் இருக்கிறது, நிறுவனத்தில் இருந்து எவ்வளவு கணக்குத் தொகை வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஈ.பி.எஃபின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தகவல்கள் பெறலாம். அல்லது மிஸ்ட்கால் மூலமாகவும் உங்களின் கணக்கில் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிந்து கொள்ளலாம்.

Check EPF Balance Online,

EPF Balance Enquiry இணையத்தில் அறிந்து கொள்வதற்கான படிநிலைகள்

EPFO-ன் அதிகாரப்பூர்வ இ ணைய தளத்திற்கு செல்லுங்கள். epfindia.gov.in என்ற இணையத்தில், ஈ.பாஸ்புக் என்ற பகுதி காட்டப்படும்.

அதை கிளிக் செய்தவுடன் லாக்-இன் டூ வியூ பாஸ்புக் என்பதை காட்டும்.

அதில் சென்றவுடன், UAN, பாஸ்வேர்ட், மற்றும் கேப்சா ஆகியவற்றை பதிவு செய்து உள்ளே செல்லவும்.

EPF Balance Enquiry, Check EPF Balance Online

புதிதாக லாகின் செய்பவர்களுக்கு

புதிதாக லாகின் செய்பவர்கள் முதலில் UAN – ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படி ஆக்டிவேட் செய்ய Unified Member Portal செல்ல வேண்டும்.

அங்கு உங்களின் UAN எண், பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால், உங்களுக்கான பாஸ்வர்ட் கிடைக்கும்.

ஆறு மணி நேரங்கள் கழித்து ஈ.பி.எஃப். ஆர்கனிசேசனில் மீண்டும் ஈ. பாஸ்புக் செல்லவும். அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை அளித்து உள்ளே செல்லவும்.

அந்த பகுதியில் நீங்கள் உங்களின் மெம்பர் ஐடியை தேர்வு செய்து கொள்ளவும்.

அதனை தேர்வு செய்த பின்னர், உங்கள் நிறுவனம் பெயர் மற்றும் இதர தகவல்கள் கிடைக்கும். அதன் பின்பு அங்கு அப்டேட் செய்யபட்ட புதிய ஈ.பி.எஃப். பாஸ்புக் மற்றும் இருக்கும் பணத்தின் மதிப்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க : ஐ.ஆர்.சி.டி.சி தக்கல் மூலமாக டிக்கட் புக் செய்வது எப்படி ?

எஸ்.எம்.எஸ் மூலமாக பெறுவது எப்படி ?

7738299899 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து EPFOHO UAN என்று டைப் செய்து அனுப்பினால் உங்களுடைய பி.எஃப். பணம் மற்றும் கடைசி காண்ட்ரிபூசன் ஆகியவை குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

தமிழ், ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மற்றும் பெங்காளி ஆகிய மொழிகளிலும் உங்களுக்கான தகவல்கள் கிடைக்கும்.

ஒரு வேலை தமிழில் உங்களுக்கு இந்த தகவல்கள் வேண்டும் என்றால் EPFOHO UAN TAM என்பதை குறுஞ்செய்தியாக அனுப்பலாம். எந்த மொழியில் உங்களுக்கு தகவல்கள் வேண்டும் என்றால் அந்த மொழியில் ஆங்கில வார்த்தையில் இருக்கும் முதல் மூன்று எழுத்துகளை EPFOHO UAN -யின் இறுதியில் சேர்த்து அனுப்ப வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close