PF Withdrawal Rules Updated: தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக பி.எப். பங்கினை சம்பளத்தின் மூலம் செலுத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் சார்பில் ஒரு பங்கும், நிறுவனம் சார்பில் ஒரு பங்கும் பிஎப் கணக்கில் சேர்ந்து வருகிறது. தொழிலாளர், அந்த வேலையை விடும்போது, அந்த பி.எப். பணம், அவர்களுக்கு உற்றநேரத்தில் கைகொடுக்கிறது.
பி,எப். பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அதேபோல், நமது சம்பளத்தில் இருந்து எத்தனை சதவீதம், பி.எப் கணக்கிற்கு சென்று சேருகிறது என்ற விஷயமும் தெரிவதில்லை. இதுபோன்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
நாம் நமது UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கும் பட்சத்தில், பி.எப். பணத்தை கிளெய்ம் செய்வது மிக எளிதாகிறது. ஆப்லைன் முறையில், பி.எப். பணத்தை நாம் கிளெய்ம் செய்யமுடியாது என்று விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர், ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் கிளெய்ம் செய்திருந்தால், அவரது ஆன்லைன் கிளெய்ம் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும் என்று பி.எப். அலுவலக உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
How to make online claim : ஆன்லைன் முறையில் பி.எப். கிளெய்ம் செய்யும் வழிமுறை
1. https://www.epfindia.gov.in/site_en/ என்ற EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2. அதன் முகப்பு பக்கத்தில் உள்ள ஆன்லைன் கிளெய்ம் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
3. ஆன்லைன் கிளெய்ம் ஆப்சனில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற லிங்கை தேர்வு செய்யவும்.
4. கேட்கப்பட்டுள்ள இடத்தில் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடவும்.
5. இந்த வழிமுறைகளை நிறைவுசெய்தபின், claim settlement option தேர்வு செய்யவும்.
6. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இந்த போர்டலில், Know your customer பகுதியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிரப்பியிருந்தால், ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து எந்தவொரு படிவத்தையும் பெற்று ஆன்லைன் கிளெய்மிங் போது சமர்பிக்க தேவையில்லை.
7. எனவே, பணியில் இருக்கும்போதே, know your customer பகுதியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் கவனமாக பூர்த்தி செய்துகொள்வது புத்திசாலிததனம்.