Advertisment

SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் விபரம் சேகரிப்பு - நல்ல விசயத்திற்காகத்தான்.....

Labour ministry : SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு, ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pf,rules, interest,apply, பிஎஃப், சேமிப்பு,

Pf,rules, interest,apply, பிஎஃப், சேமிப்பு,

Aanchal Magazine, Sunny Verma

Advertisment

அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களில் பட்டியல் இனத்தவர் (SC), பழங்குடியினர் ( ST) பிரிவை சேர்ந்தவர்களின் விபரங்களை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூலம் திரட்ட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த தகவல் திரட்டும் பணிகளை முதலில், நிடி ஆயோக் அமைப்பு மேற்கொண்டிருந்தது. நிடி ஆயோக் அமைப்பு, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டுவந்ததால், தற்போது இந்த பணி, EPFO மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. EPFO, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் எத்தனை பேர் SC மற்றும் ST பிரிவை சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை திரட்ட உள்ளது.

பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களிலும் இந்த தகவல்களை திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள படிவத்தில், நிறுவனத்தின் பெயர், மொத்த ஊழியர்கள் SC பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ST பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்து தருமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் நிறுவனத்தின் பிஎப் பங்கு தொகையை, அரசாங்கமே வழங்கி வருகிறது. தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் நிறுவனப்பங்கையும், அரசாங்கமே வழங்கும் பொருட்டு இந்த தகவல் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொருளாதார அடிப்படையில் SC மற்றும் ST பிரிவு ஊழியர்கள் மேலும் ஏற்றம் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு, ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றுள் பெரும்பாலான பணம் செலவழிக்கப்படாமலேயே உள்ளது. இந்த திரட்டப்பட்ட தகவல்களை கொண்டு SC மற்றும் ST பிரிவு ஊழியர்களின் பென்ன் பங்கு மற்றும் சேமநல நிதிக்காக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment