டெல்லி ஆசாத்பூர் காய்கறி சந்தைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஆக.2) அதிகாலை 3.30 மணிக்கு சென்றார். இதனால் அங்கு பரப்பு ஏற்பட்டது. இது டெல்லியில் உள்ள மிகப்பெரிய காய்கறிச் சந்தைகளுள் ஒன்றாகும். இதற்கிடையில் ராகுல் காந்தி உதவியாளர்கள், கேரளத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு சனிக்கிழமை டெல்லி திரும்பிவிட்டதாக கூறினார்கள்.
Advertisment
கர்நாடகாவில் உணவு டெலிவரி தொழிலாளியுடன் இரு சக்கர வாகனப் பயணம், டெல்லி கரோல் பாக் மெக்கானிக் கடை விசிட் போன்று இதுவும் திட்டமிடப்படாமல் நடந்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தன் உருவத்தை காட்ட முயற்சிக்கிறார்.
இந்த நிலையில் ஆசாத்பூர் விசிட் அமைந்துள்ளது. இது குறித்து ராகுல் உதவியாளர் ஒருவர், “இது பற்றி நாங்கள் யாரிடமும் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் அது பரந்து விரிந்த காய்கறி சந்தை” என்றார். மேலும், “இதுபோன்ற வருகைகளின் போது உங்களால் பார்வையாளர்களைத் தயார்படுத்த முடியாது என்றாலும், இதுபோன்ற பயணங்களின் போது ராகுல் எந்த விரோதத்தையும் சந்தித்ததில்லை” என்றார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். தொடர்ந்து களத்தில் மக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“