பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுதாரர்களிடம், இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார நிலைமைகள் ஏன் அடிப்படையாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் அங்கம் வகித்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “75 ஆண்டுகளுக்குப் பிறகும் தலைமுறை தலைமுறையாக வறுமையை நாம் காண்கிறோம். வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிரிவில்) ஏராளமான மக்கள் உள்ளனர். பொருளாதார அடிப்படையிலான உறுதியான நடவடிக்கை ஏன் இருக்க முடியாது?… கோட்பாட்டில், அரசாங்கப் பள்ளிகள் உள்ளன, வேலைகள் உள்ளன, ஆனால் இவர்களும் மற்றவர்களைப் போல் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் ஒரே மாதிரியான குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றால் என்ன தவறு?” என்று கேட்டார்.
இதையும் படியுங்கள்: காரிய கமிட்டியை தேர்வு செய்யும் பிரதிநிதிகளை தேர்வு செய்ய புதிய தலைவருக்கு அதிகாரம்; காங்கிரஸ்
இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான பெஞ்ச், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம் திரிவேதி மற்றும் ஜே.பி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு வேலைகள் மற்றும் சேர்க்கைகளில் EWS க்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய 103வது திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷதன் ஃபராசத், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விலக்கு அளித்து 103வது சட்டத்திருத்தம் சமத்துவக் குறியீட்டை மீறுவதாகவும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகவும் வாதிட்டபோது நீதிபதி ரவீந்திர பட் கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞருக்கு பதிலளித்த தலைமை நீதிபதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருப்பதால் EWS நீட்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று கூறினார்.
“இந்தத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட யோசனை என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே ஒரு பாதுகாப்பு குடை கொடுக்கப்பட்டிருப்பதால், அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பை அளிக்கிறது… அதனால்தான் அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர்” என்று தலைமை நீதிபதி கூறினார்.
ஆனால் EWS ஒதுக்கீடு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு வேறு என்று ஃபராசத் கூறினார்.
“பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு என்பது ஒரு குழுவிற்கான ஒதுக்கீடு, ஒரு தனிநபருக்கான ஒதுக்கீடு அல்ல. இது வரலாற்று தவறுகளை சரிசெய்வது, பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது…. இது குழுவிடம் பேசுகிறது…. EWS ஒதுக்கீடு தனிநபரின் பொருளாதார நிலை குறித்து தனிநபரிடம் பேசுகிறது,” என்று அவர் கூறினார், மேலும், எனவே பிற்படுத்தப்பட்டோர் ஏற்கனவே பிற இடஒதுக்கீட்டைக் கொண்டிருப்பதால் EWS இல் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கூறுவது அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற உறுதியான நடவடிக்கைகள் உள்ளன என்றும் அதற்கு இடஒதுக்கீடு அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil