தீயணைப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்க முடியாது - முன்னாள் சிபிஐ இயக்குநர் கடிதம்

தேர்வுக் குழு என் தரப்பு நியாயங்களையோ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை - அலோக் குற்றச்சாட்டு

Ex-CBI Director Alok Verma : மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநராக செயல்பட்டு வந்தவர் அலோக் வர்மா. அதே துறையில் சிறப்பு இயக்குநராக பணியாற்றியவர் ராகேஷ் அஸ்தானா. இருவரும் பரஸ்பரம் தங்களுக்கு லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்ததன் விளைவாக இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. மேலும் நாகேஷ்வர ராவ் என்ற சி.பி.ஐ அதிகாரியை இடைக்கால இயக்குநராக அறிவித்தது பிரதமர் அமைச்சகம்.

Ex-CBI Director Alok Verma Letter

மத்திய புலனாய்வுத் துறையில் இருப்பவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை என்பதாலும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதாலும் கட்டாய விடுப்பில் செல்ல இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அலோக் வர்மா.

Ex-CBI Director Alok Verma

Ex-CBI Director Alok Verma Letter

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு எதன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டார் அலோக் வர்மா என்று கேள்வி எழுப்பி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது. அனைத்து சவால்களையும் வென்று மீண்டும் சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் பிரதமர் அமைச்சகம், அலோக் வர்மாவிற்கு புதிய இலாக்காவினை பரிந்துரை செய்து பணி மாற்றம் செய்தது.  தீயணைப்புத் துறை இயக்குநராக பதவியேற்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிராகரித்துள்ளார் அலோக் வர்மா.

மேலும் படிக்க : சிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close