Ex-CBI Special Director Rakesh Asthana : சி.பி.ஐ அமைப்பின் முன்னாள் சிறப்பு இயக்குநராக பணியாற்றியவர் ராகேஷ் அஸ்தானா. சி.பி.ஐயின் தலைமை இயக்குநராக பணியாற்றிய அலோக் வர்மா மீது ஊழல் மற்றும் லஞ்சப் புகாரினை பதிவு செய்தார். இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ள, இருவரையும் பணியில் இருந்து நீக்கி கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பபட்டனர்.
Ex-CBI Special Director Rakesh Asthana
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் சென்று கொண்டிருக்கின்ற நேரத்தில் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி தலைவராக அஸ்தானா நியமிக்கப்பட்டார். தற்போது அதிக அளவு சம்பளம் வாங்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை Personnel Ministry வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ராகேஷ் அஸ்தானா, தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் ஒய்.சி. மோடி, மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு காவற்படையின் இயக்குநர் எஸ்.எஸ். தெஸ்வால் உள்ளிட்டோர் அதிகப்படியான சம்பளம் வாங்கும் அதிகாரிகளாக பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். இம்மூவரும் 1984ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!