Advertisment

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5 % மட்டுமே.. முன்னாள் பொருளாதார ஆலோசகர் தகவல்!

இதைக் கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சியையும் கணக்கிட முடியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ex cea Arvind Subramanian

ex cea Arvind Subramanian

ex cea Arvind Subramanian : கடந்த 2011- 12 ஆ ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சியானது 7% பதில் வெறும் 4.5% மட்டுமே வளர்ந்துள்ளதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய புள்ளியல் அலுவலகம் 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது, இதற்கு முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் விளக்கியது.

கடந்த நிதியாண்டில் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதம் மட்டுமே இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது காலாண்டில் .6 சதவீதமாகவும் நான்காவது காலாண்டில் (ஜனவரி மார்ச்) 5.8 சதவீதமாகவும் ஜிடிபி வளர்ச்சி சரிந்தது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னாள் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் பொருளாதார வளர்ச்சி கணக்கீடு குறித்து முக்கிய சில விவரங்களை பகிர்ந்து உள்ளார். இதுக் குறித்து அவர் தெரிவிருப்பதாவது, “ பொருளாதார வளர்ச்சியானது 2004-05 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென்று 2011-12 ஆம் ஆண்டு அடிப்படையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது வெறும் ஒப்பிடுதலுக்கு மட்டுமே சரியாகும். ஆனா உண்மையில் இதைக் கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சியையும் கணக்கிட முடியாது.

பழைய கணக்கெடுப்பை கொண்டு ஒப்பிடுகையில் தற்போது வேலையின்மை குறைந்துள்ளது. வேலையின்மை முக்கிய வளர்ச்சியை பெருமளவில் குறைக்கும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதனால் பொருளாதார வளர்ச்சியில் தனிமனித வளர்ச்சி என்பது பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழந்தோர் எண்ணிக்கை கொண்டு நாம் கணக்கிட்டால் வருடத்திற்கு வளர்ச்சி வெறும் 4.5 மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால் கணக்கிடுதல் படி 7% என தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment