Advertisment

தேர்தல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்காதீர்கள்... முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் பிரதமருக்கு கடிதம்

தேர்தல் ஆணையர்கள் தரமிறக்கப்படுவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள், ஆனால், முன்னுரிமை வரிசை மாறவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

author-image
WebDesk
Sep 17, 2023 11:12 IST
Elec

தேர்தல் ஆணையர் பதவியை அமைச்சரவை செயலாளர் பதவிக்கு அந்தஸ்தை குறைக்காதீர்கள்... முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் பிரதமருக்கு கடிதம்

முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் குழு ஒன்றிணைந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில், மூன்று தேர்தல் ஆணையர்களின் பணி நிலைமைகளைத் அஸ்ந்தஸ்தைக் குறைக்கும் மசோதாவுக்கு தங்கள் கவலைகளைத் தெரிவிக்க பரிசீலித்து வருகின்றனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரியவந்துள்ளது.

Advertismentதற்போது இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த கடிதத்தில், குறைந்தபட்சம் மூன்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது, தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023-ல் உள்ள ஒரு உட்பிரிவு பற்றிய கவலையை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தலைமை தேர்தல் ஆனையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் சம்பளம், கொடுப்பனவு மற்றும் பணி நிபந்தனைகளை அமைச்சரவை செயலாளருடன் சீரமைக்க முன்மொழிகிறது - தற்போது, இந்த பதவி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமாக உள்ளது.

முன்னாள் தேர்தல் குழு தலைவர்கள் இதை தரமிறக்குவதாகக் கருதுகின்றனர். இது விரும்பத்தகாதது, தேர்தல் ஆணையர்களின் சுதந்திரம், அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த மாற்றத்தை அமல்படுத்துவதற்கு எதிராக அவர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், இத்தகைய தரமிறக்குதல் அனுப்பும் அரசியல் சமிக்ஞை குறித்து ஸ்தாபனத்தின் ஒரு பகுதிக்குள் கவலைகள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கேபினட் செயலாளரின் அடிப்படை சம்பளம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதால், முன்மொழியப்பட்ட மாற்றத்தில் குறிப்பிடத்தக்க நிதி தாக்கங்கள் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்குப் பின், பெறும் பலன்கள், ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு சேவைகள் உட்பட வாழ்நாள் முழுவதும் உதவிகள் வழங்கப்படுகிறது. ஆனால், கவலை என்னவென்றால், தேர்தல் ஆணையர்களின் பணி நிலைமைகளை - அதன் விளைவாக அந்தஸ்தை - அதிகாரத்துவத்துடன் சீரமைப்பது அவர்களின் கைகளை கட்டிப்போட்டு அவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடும்.

அரசியல்வாதிகள் இடையேயும் இந்த மீறல் வழக்குகளில் நிர்வாகத்தினரிடையேயும் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியின் அந்தஸ்து அல்லது அதிகாரம் முக்கியமானது என்பதால், தற்போதைய நிலையைப் பாதுகாக்க முன்னாள் முதல்வர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மறுபுறம், ஒரு அரசாங்க அதிகாரி, இந்த கவலைகளை எதிர்த்தார், இதுபோன்ற அச்சங்கள் தவறானவை என்று வலியுறுத்தினார். ‘முன்னுரிமை அட்டவணை’ எந்த திருத்தங்களுக்கும் உட்படாது, தலைமை தேர்தல் ஆணையர் இந்த அட்டவணையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அதே பதவி அல்லது அந்தஸ்தை தொடர்ந்து அனுபவிக்கும்.

முன்னுரிமை அட்டவணை என்பது அரசாங்கத்தில் செயல்படுபவர்கள், அதிகாரிகளை அவர்களின் பதவிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு நெறிமுறை பட்டியல் ஆகும். சடங்கு நிகழ்வுகளின் போது இருக்கை ஏற்பாடுகளை தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அட்டவணையில் வரிசை எண் 9-ல் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில், தலைமை தேர்தல் ஆணையர் 9ஏ-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த அட்டவணை சம்பிரதாய நிகழ்வுகளைப் பற்றியது, அரசாங்கத்தின் தினசரி பரிவர்த்தனைகள் அல்லது தன்னாட்சி நிறுவனங்களுடனான அதன் உறவின் மீது சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ராஜ்யசபாவில் ஆகஸ்ட் 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா 2023, மூன்று தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பான குழுவின் அரசியலமைப்பைக் கையாள்கிறது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரவை அமைச்சரைக் கொண்ட இந்தக் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 2023 தீர்ப்பின் பரிந்துரைக்கு மாறாக, இந்திய தலைமை நீதிபதி உறுப்பினராக இல்லை.

இந்த மசோதா, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பணி நிலைமைகளை உச்ச நீதிமன்ற நீதிபதி தரத்தில் இருந்து அமைச்சரவை செயலாளரின் நிலைக்கு மாற்றுகிறது.

மார்ச் 2, 2023 தேதியிட்ட தீர்ப்பில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கான நியமனங்களை நிர்வகிக்கும் மத்திய அரசின் சட்டம் இல்லாத நிலையில், இத்தகைய நியமனங்கள் ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்தக் குழுவில் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

தேர்தல் ஆணையர்களின் பணி நிலைமைகளை கேபினட் செயலாளரின் பணி நிலைமைகளுடன் ஒப்பிடுவது இன்னும் சிக்கலாக உள்ளது. ஏனெனில், கேபினட் செயலாளர், தேர்தல் ஆணையர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேடல் குழுவை வழிநடத்துவார். அதில் இருந்து பிரதமர் தலைமையிலான குழு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவால் இறுதித் தேர்வு செய்யப்படும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment