பிரபல விண்வெளி விஞ்ஞானியும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கே சிவன், ஐஐடி இந்தூர் கவர்னர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
இது குறித்து ஐஐடி இந்தூர் நிறுவனம் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விண்வெளித் துறையின் முன்னாள் செயலாளருமான டாக்டர். கே. சிவன் ஐஐடி இந்தூரின் ஆளுநர்கள் குழுவின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த பேராசிரியர் தீபக் பி பாதக்கிற்கு பதிலாக டாக்டர் சிவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) இந்தூர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மற்றொரு ட்வீட்டில் நிறுவனம், “நிறுவனத்திற்கு வழிகாட்டியாக இருந்து எங்களை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று பதவி விலகும் தலைவர் பேராசிரியர் தீபக் பாதக்குக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியா ஒரு வரலாற்று சாதனையை அடைந்து, விண்வெளிப் பொறியியலில் தனது திறமையையும் நிபுணத்துவத்தையும் நிரூபித்திருக்கிறது.
இந்த நிலையில், அவரை ஐஐடி இந்தூர் குடும்பத்தில் சேர்க்க இதைவிட சிறந்த நேரம் இருந்திருக்காது என்று ஐஐடி இந்தூரின் இயக்குனர் சுஹாஸ் எஸ் ஜோஷி கூறினார்.
இந்த நிறுவனம் விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியலில் BTech உட்பட 10 புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் சுபாஷ் ஜோஷி, “கே சிவனின் தலைமையில் அறியப்படாத விண்வெளி தொடர்பான படிப்புகளில் நிறுவனம் புதிய உச்சத்தை அடையும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“