கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஜம்மு-கஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது .
தற்போது, அங்கே எதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கிறது? இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்களா? என்பது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது . உண்மையில், அந்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
எல்லா அர்த்தமும் ஒரு கண்ணோட்டத்தில் தான் பிறக்கும். சில படங்களைத் தருகிறோம், அர்த்தங்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்.
ஷூயிப் மசூதி என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவைகள்
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் உட்புறத்தில் மிதக்கும் காய்கறி சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் காய்கறி சப்ளையர்கள்.
புகைப்படம் பொய் சொல்லுமா? என்ற கேள்வியை விட உண்மையை சொல்லும்
திறன் புகைப்படத்திற்கு உண்டா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி...
அன்றாட வாழ்க்கை இயல்புகளை தேடுகிறதா? ஜம்மு-காஷ்மீர்
உங்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொருவர் தேடலும் வெவ்வேறு திசையில் இருக்கிறது....
அரசியலாக்கப்படாத எங்கள் விளையாட்டு.....
பின்குறிப்பு: இந்த புகைப்படங்கள் தரும் அர்த்தங்களை நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.