Advertisment

2009, 2014, 2019 தேர்தல்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் எவ்வளவு நெருக்கமாக இருந்தன?

கடந்த இரண்டு முறை தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை கணிப்பதில் பெரும்பாலானோர் சரியாக இருந்தனர், ஆனால் வெற்றியின் அளவை எதிர்பார்க்கவில்லை. 2009 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றபோது, கணித்ததை விட வித்தியாசம் அதிகமாக இருந்தது.

author-image
WebDesk
New Update
exit polls 2024

Now, onto exit polls: A look back at how close they were in 2009, 2014, 2019

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஏப்ரல் 19 முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இறுதியாக, மக்களவைத் தேர்தல் சனிக்கிழமை நிறைவடையும் நிலையில் இப்போது அனைவரின் கவனமும் கருத்துக் கணிப்பு முடிவுகள் பக்கம் திரும்பியுள்ளது.

Advertisment

ஜூன் 4-ல், முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, ​​இந்த கருத்துக் கணிப்புகள்தான் கட்சிகளை நம்பிக்கையுடன் வைக்கும்.

2014 மக்களவை தேர்தல் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடைபெற்றது, மே 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன, 2019 தேர்தல், ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடந்தது, மற்றும் முடிவுகள் மே 23 அன்று வெளிவந்தன.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் எவ்வளவு நெருக்கமாக இருந்தன?

2014 ஆம் ஆண்டில், சராசரியாக எட்டு கருத்துக் கணிப்புகள் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 283 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) 105 இடங்களையும் வெல்வதாக மதிப்பிட்டது. இவை அந்த ஆண்டு மோடியின் அலையை மதிப்பிடத் தவறிவிட்டன.

முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 60 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் பாஜக 282 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

exit polls 2014  

2019 ஆம் ஆண்டில், கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்திறனை குறைத்து மதிப்பிட்டது.

சராசரியாக 13 கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 306 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 120 இடங்களையும் கைப்பற்றும் என்று மதிப்பிட்டன.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 93 இடங்களிலும் வென்றது. இதில் பாஜக 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றன.

exit polls 2019

2009 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​சராசரியாக நான்கு கருத்துக் கணிப்புகள் வெற்றியாளரின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 195 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 185 இடங்களையும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 158 இடங்களுடன் ஒப்பிடுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இறுதியாக 262 இடங்களைப் பெற்றது. இதில் காங்கிரஸ் 206 இடங்களையும் BJP 116 இடங்களையும் வென்றது.

exit polls 2009

Read in English: Now, onto exit polls: A look back at how close they were in 2009, 2014, 2019

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Exit Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment