அகர்தலாவில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஹசாரா பாராவில் திரிபுரா சட்டமன்றத் தேர்தலின் போது ரியாங் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார்.
பாஜக திரிபுராவைத் தக்கவைத்துக்கொள்ளவும், நாகாலாந்தில் கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (NDPP) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும், மேகாலயாவில் அதன் எண்ணிக்கையை ஓரளவு மேம்படுத்தவும் முனைகிறது. அதே நேரத்தில் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் அழிவை நோக்கிச் செல்வது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
Advertisment
முன்னதாக, நான்கு எக்சிட் போல்களின் மொத்த முடிவுகள் திங்கள்கிழமை மாலை வெளியாகத் தொடங்கின. அதில், 2018 இல் திரிபுராவில் 36 இடங்களைப் பெற்ற பாஜக, 60 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 32 இடங்களுடன் அறுதிப் பெறும்பான்மை வெற்றியை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்தலில் கிங் மேக்கர் என்று பரவலாக நம்பப்பட்ட அரச வாரிசு பிரத்யோத் டெபர்மா தலைமையிலான டிப்ரா மோதா 13 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
Advertisment
Advertisements
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு, திரிபுராவில் ஆளும் பிஜேபி-ஐபிஎஃப்டி கூட்டணிக்கு 36-45 இடங்களைப் பெறும் என்று கணித்திருந்தாலும், ஈடிஜி ரிசர்ச்-டைம்ஸ் நவ் இந்தக் கூட்டணிக்கு 21-27 இடங்களை வழங்கியுள்ளது.
திரிபுரா தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் 1993 முதல் இடது முன்னணியின் இடைவிடாத ஓட்டத்தை 2018 இல் முடிவுக்குக் கொண்டு வர, பாரதிய ஜனதா கருத்தியல் ரீதியாக பெரும் உந்துதலை கொண்டது.
மேகாலயாவில், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், எந்த கட்சியும் பாதியை தாண்டும் என, எக்சிட் போல் கணிக்கப்படவில்லை. ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP), நான்கு கருத்துக் கணிப்புகளின்படி, 20 இடங்களை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக, என்பிபி கூட்டணியில் ஆட்சியில் இருந்தாலும், தேர்தலில் தனித்து போட்டியிட்டது, அதன் எண்ணிக்கையை 2ல் இருந்து 6 ஆக அதிகரிக்கலாம்.
2021 நவம்பரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலகிய பிறகு ஒரே இரவில் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறிய திரிணாமுல் காங்கிரஸ், எக்ஸிட் போல்களின் சராசரியின்படி 11 இடங்கள் வரை வெல்லலாம்.
இந்த முறை கான்ராட் சங்மா (NPP) மற்றும் முகுல் சங்மா (TMC) போட்டியாக பார்க்கப்பட்டது. 2018ல் 21 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு இந்த முறை 6 இடங்கள் கிடைக்கும் என எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையில், 60 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 42 இடங்கள் என்ற பெரும்பான்மையுடன் NDPP-BJP கூட்டணி மீண்டும் வரத் தயாராக இருக்கும் ஒரு மாநிலம் நாகாலாந்து ஆகும்.
கூட்டணியின் ஒரு பகுதியாக, பாஜக 20 இடங்களிலும், என்டிபிபி 40 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/